Asianet News TamilAsianet News Tamil

வங்கதேசத்தின் செயின்ட் மார்ட்டின் தீவில் என்ன இருக்கிறது? அமெரிக்கா குறி வைப்பது எதற்காக?

1971ஆம் ஆண்டு வங்கதேசம் தனி நாடாக உருவானதில் இருந்து, செயின்ட் மார்ட்டின் தீவு அந்நாட்டு அரசியலின் மையமாக இருந்து வருகிறது. சீனாவும் அமெரிக்காவும் இப்பகுதியில் தங்கள் இருப்பை வலுப்படுத்த முயற்சி செய்கின்றன.

The geopolitical significance of the St. Martin Island, why it is important for the United States? sgb
Author
First Published Aug 13, 2024, 8:01 PM IST | Last Updated Aug 13, 2024, 8:30 PM IST

இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் முன்னாள் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தன்னை ஆட்சியில் இருந்து நீக்கியதில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார். அமெரிக்காவுக்காக செயின்ட் மார்ட்டின் தீவின் இறையாண்மையை விட்டுக் கொடுத்திருந்தால் தனது ஆட்சியைத் தக்கவைத்திருக்கலாம் என்று அவர் கூறியிருந்தார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஷேக் ஹசீனா அளித்த பேட்டிதான் செயின்ட் மார்ட்டின் தீவை பேசுபொருளாக மாற்றியுள்ளது. செயின்ட் மார்ட்டின் தீவுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அமெரிக்கா அந்தத் தீவு மீது குறியாக இருப்பது ஏன்? பேட்டியில் செயின்ட் மார்ட்டின் புவியியல் ரீதியான முக்கியத்துவம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

“இறந்த உடல்களின் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது என்பதற்காக ராஜினாமா செய்தேன். மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினர். ஆனால் நான் அதை அனுமதிக்கவில்லை. நானே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தேன்" என்று ஷேக் ஹசீனா கூறினார்.

"செயின்ட் மார்டின் தீவின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து வங்காள விரிகுடாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அனுமதித்திருந்தால் நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும். எனது மண்ணின் மக்களிடம், 'தயவுசெய்து தீவிரவாதிகளின் கைப்பாவை ஆகிவிட வேண்டாம்' என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிட்ஜுக்குப் பின்னால் 10 ஆண்டுகள் சிக்கி இருந்த இளைஞர்! அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

செயின்ட் மார்ட்டின் தீவின் முக்கியத்துவம்:

1971ஆம் ஆண்டு வங்கதேசம் தனி நாடாக உருவானதில் இருந்து, செயின்ட் மார்ட்டின் தீவு அந்நாட்டு அரசியலின் மையமாக இருந்து வருகிறது. வங்காள விரிகுடாவிற்கு அருகில், மியான்மர் கடல் எல்லையில் இந்தத் தீவு உள்ளது. இதுதான் சர்வதேச ஈடுபாடுக்கு வழிவகுத்தது. குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும் இப்பகுதியில் தங்கள் இருப்பை வலுப்படுத்த முயற்சி செய்கின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷேக் ஹசீனா, வங்கதேசத் தேர்தலில் தனது எதிர்க்கட்சியான பிஎன்பி வெற்றி பெற உதவிசெய்து, அதற்கு ஈடாக செயின்ட் மார்ட்டின் தீவில் தனது ராணுவ தளத்தை உருவாக்க அமெரிக்கா திட்டம் போடுகிறது என்று குற்றம் சாட்டினார். பிஎன்பி கட்சிக்கு வாக்களிப்பது, செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவிற்கு விற்பதற்குச் சமம் என்றும் அவர் கூறினார்.

தீவை குத்தகைக்கு விட்டாலும் அது தொடர்ந்து வங்கதேச அரசின் ஆட்சிக்குக் கீழ் இருக்கும் என்ற ஷேக் ஹசீனா, தான் பதவியில் இருக்கும் வரை இதுபோன்ற நடவடிக்கையை அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "செயின்ட் மார்ட்டின் தீவை கைப்பற்றுவது குறித்து நாங்கள் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. வங்கதேசத்துடனான நல்லுறவை நாங்கள் மதிக்கிறோம். ஜனநாயகத்தை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எங்கள் உறவை வலுப்படுத்த முயல்கிறோம். சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடப்பதையே ஆதரிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

செயின்ட் மார்ட்டின் தீவு எங்கே இருக்கிறது?:

செயின்ட் மார்ட்டின் தீவு வங்காள விரிகுடாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வங்கதேசத்தின் ஆட்சியில் இருக்கும் சிறிய பவளத் தீவாகும். இது வங்கதேசத்தின் தெற்கே உள்ள தீபகற்பத்தில் காக்ஸ் பஜார்-டெக்னாஃபுக்கு தெற்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தீவின் பரப்பளவைப் பொறுத்தவரை, செயின்ட் மார்டின் தீவு மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. தற்போது, இந்தத் ​​தீவில் 3,700 பேர் வசிக்கின்றனர். தென்னை விவசாயம், மீன்பிடித்தல், கடற்பாசி அறுவடை மற்றும் நெல் சாகுபடி போன்ற இங்கு முக்கியத் தொழில்களாக உள்ளன. இங்கு விளையும் பொருட்கள் பல மியான்மருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இரவையும் பகலையும் பிரிக்கும் மெல்லிய கோடு! நாசா வெளியிட்ட பூமியின் அபூர்வமான புகைப்படம்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios