பிரிட்ஜுக்குப் பின்னால் 10 ஆண்டுகள் சிக்கி இருந்த இளைஞர்! அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில் மூடப்பட்ட சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பிரிட்ஜுக்கு பின்னால் 10 ஆண்டுகளாக ஒருவரின் உடல் சிக்கியிருந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. 2009ல் காணாமல் போன லாரியின் நிலை என்ன ஆனது?

Stuck behind fridge for 10 Years, video shows what happened to larry ely murillo-moncada sgb

அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக தான் வேலை பார்த்த இடத்தில் இருத்த பெரிய பிரிட்ஜுக்குப் பின்னால் சிக்கியிருந்த ஒருவரைப் பற்றிய திடுக்கிடும் செய்தி வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவின் அயோவாவில் உள்ள 'நோ ஃப்ரில்ஸ் சூப்பர் மார்க்கெட் சுமார் மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டில் மீண்டும் அதை சீரமைக்குப் பயணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பிரிட்ஜ் ஒன்றை அகற்றியபோது அதற்குப் பின்னால் அழுகிய நிலையில் ஒரு மனித உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் உடலைக் கைப்பற்றி டிஎன்ஏ சோதனை செய்தபோது, அந்த உடல் 2009 இல் காணாமல் போன லாரி எலி முரில்லோ-மோன்காடா உடையது என்று கண்டறியப்பட்டது. 25 வயதான லாரி பிரிட்ஜின் பின்னால் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் வேறு எந்த விதமான தவறும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை தெரியவந்துள்ளது.

2009ஆம் ஆண்டில் லாரி காணாமல் போனதில் இருந்து 2019 வரை, 10 ஆண்டுகளாக அவரது குடும்பத்தினருக்கு அவரது நிலை என்ன என்று தெரியவே இல்லை.

பயங்கரமான முறையில் உயிரிழந்த லாரியை அவரது உறவினர்களும் நண்பர்களும் கடைசியாக 2009 இல் தான் பார்த்துள்ளனர். அன்று அவர் வெளியே சென்றபோது வெறுங்காலுடன் சென்றதாகவும், பனிப்புயலின் போது காணாமல் போய்விட்டார் என்றும் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்.

குடும்பத்தினர் கொடுத்த புகாரில் லாரி அணிந்திருந்ததாகக் கூறப்பட்ட ஆடையும் லாரியிடன் சடலத்தை அடையாளம் காண உதவியது. லாரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இத்தனை ஆண்டுகளாக இதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

லாரி பிரிட்ஜின் பின்னால் சிக்கிக்கொண்ட பிறகும் சூப்பர் மார்க்கெட் ஏழு ஆண்டுகளாக இயங்கியுள்ளது. பிறகு மூன்று ஆண்டுகள் மூடப்பட்டு இருந்திருக்கிறது. லாரி தவறி விழுந்த பிறகு உதவிக்கு அழைத்திருப்பார். கடைக்கு உள்ளேயும் வெளியேயும் பலர் இருந்திருப்பார்கள். அவரது கூக்குரல் ஏன் யாருக்கும் கேட்கப்படாமல் போனது?

12 அடி உயரம் கொண்ட அந்த பெரிய பிரிட்ஜில் இருந்து வந்த சத்தத்தால் அதற்குப் பின்னால் இருந்து லாரி எழுப்பிய குரல் கேட்காமல் போயிருக்கும் என்று போலீசார் விளக்குகின்றனர். தொழில்நுட்ப வல்லுநர்களும் பிரமாண்டமான அந்த பிரிட்ஜில் இருந்து வரும் சத்தம் லாரியின் குரலை கேட்காமல் செய்திருக்கும் என்று கூறுகின்றனர். லாரிக்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிய வைக்க கிராபிக்ஸ் காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios