இரவையும் பகலையும் பிரிக்கும் மெல்லிய கோடு! நாசா வெளியிட்ட பூமியின் அபூர்வமான புகைப்படம்!!
பூமியின் டெர்மினேட்டர் என்பது நமது கிரகத்தில் இரவையும் பகலையும் பிரிக்கும் நகரக்கூடிய கோடு. இது பூமியின் சுழற்சி மற்றும் சூரியனை நோக்கிய பூமியின் நிலை ஆகியவற்றின் விளைவாகும்.
பூமியின் டெர்மினேட்டர் என்று அழைக்கப்படும் மெல்லிய கோட்டின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. பூமியின் இரவையும் பகலையும் பிரிக்கும் இந்த மெல்லிய கோட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் இருந்து 267 மைல்களுக்கு மேற்பட்ட உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. பூமியில் ஓர் இடத்தில் புதிய நாள் விடியும்போது, இன்னொரு இடத்தில் சூரியன் மறையும் தருணத்தை இந்தப் படம் காட்டுகிறது.
பூமியின் டெர்மினேட்டரைத் தெளிவாகக் காணும் வாய்ப்பை சர்வதேச விண்வெளி நிலையம் எடுத்துள்ள இந்தப் புகைப்படம் வழங்கி இருக்கிறது. நாசா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.
காசாவை ரத்த பூமியாக்கும் இஸ்ரேல்! பள்ளி, மசூதியில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 93 பேர் பலி!
சூரியனின் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தை ஒளிரச் செய்வதைப் படத்தில் காணலாம். இது பூமியின் இரவு மற்றும் பகலுக்கு இடையே ஒரு எல்லையை உருவாக்குகிறது. இந்த எல்லை அடிவானத்தில் ஒரு மெல்லிய, ஒளிரும் கோடாகத் தெரியும். அங்கு வளிமண்டலத்தின் நீல நிறம் சூரிய கதிர்களால் தங்க நிறத்தை அடைவதையும் படத்தில் பார்க்கலாம்.
பூமியின் டெர்மினேட்டர் என்றால் என்ன?
பூமியின் டெர்மினேட்டர் என்பது நமது கிரகத்தில் இரவையும் பகலையும் பிரிக்கும் நகரக்கூடிய கோடு. இது பூமியின் சுழற்சி மற்றும் சூரியனை நோக்கிய பூமியின் நிலை ஆகியவற்றின் விளைவாகும்.
குளிர்காலம் அல்லது கோடை மாதங்களில் நீண்ட கால இருள் அல்லது சூரிய ஒளியைப் பெறும் வட மற்றும் தென் துருவங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் இது ஒரு நாளைக்கு இரண்டு முறை தோன்றும். சூரிய உதயத்தின்போது ஒரு முறை, சூரிய அஸ்தமனத்தின்போது ஒரு முறை பூமியின் பெரும்பாலான இடங்களில் இந்தக் கோடு கடந்து செல்கிறது.
பூமியின் அச்சு 23.5 டிகிரியில் சாய்ந்துள்ளது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களில் ஆண்டு முழுவதும் சூரிய ஒளியின் அளவு மாறுபடுகிறது. பூமியின் இந்த சாய்வு தான் பருவநிலை மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.
யாரு இந்த டேவிட் ரஷ்? ஒரே நாளில் 15 ரெக்கார்டு! கின்னல் புத்தகத்தை நிரப்பும் சாதனை மன்னன்!