காசாவை ரத்த பூமியாக்கும் இஸ்ரேல்! பள்ளி, மசூதியில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 93 பேர் பலி!
பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய பொதுமக்கள் அமைதியான முறையில் வழக்கம்போல் தொழுகை செய்துகொண்டிருந்தபோது, திடீரென ஒரு ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.
இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சனிக்கிழமை இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கியுள்ளன. இந்தத் தாக்குதலில் பலியான உடல்கள் அந்த இடம் முழுவதும் சிதறிக் கிடந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் காசா நகரில் உள்ள அல்-தபியீன் பள்ளி மற்றும் மசூதியைக் குறிவைத்துத் தாக்கி அழித்துள்ளன. சனிக்கிழமை அதிகாலை நடந்த மூன்று வான்வழித் தாக்குதல்களில் இரண்டு கட்டிடங்களும் சிதைந்து போயிருக்கின்றன.
படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிலரை தன்னார்வலர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர். உடல் பாகங்கள் இடிபாடுகளைச் சுற்றி சிதறிக் கிடந்தன. இரத்தம் தோய்ந்த உடல்கள் அந்த இடம் முழுவதும் கிடைக்கும் நெஞ்சை உலுக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
யாரு இந்த டேவிட் ரஷ்? ஒரே நாளில் 15 ரெக்கார்டு! கின்னல் புத்தகத்தை நிரப்பும் சாதனை மன்னன்!
காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் இந்தத் தாக்குலில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. இதில் 17 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய பொதுமக்கள் அமைதியான முறையில் வழக்கம்போல் தொழுகை செய்துகொண்டிருந்தபோது, திடீரென ஒரு ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.
ஆனால், இஸ்ரேல் இராணுவம் இந்த பலி எண்ணிக்கையை மறுக்கிறது. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ராணுவத்தினர் பயன்படுத்தி வந்த இடத்தைத் தான் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கி அழித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது.
கடந்த சில வாரங்களாக காசாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஜூலை 6 முதல் காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் 14 பள்ளிகள் தாக்கப்பட்டுள்ளன. 280க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சம்பளமே இல்லாமல் வேலை செய்யும் அம்பானி! செலவுகளை எப்படி நிர்வகிக்கிறார் தெரியுமா?