KYC, KYC எல்லா பேங்க்லயும் இதுதான் சொல்றாங்க... அப்படின்னா என்ன? தெரிஞ்சுக்கோங்க!!
உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் (Know Your Customer) என்று ஆங்கிலத்தில் கூறுவதைத் தான் கேஒய்சி (KYC) என்று சுருக்கமாகச் சொல்கிறார்கள். இதன் முக்கியத்துவமும் பயன்பாடும் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.
டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் KYC என்பதை அடிப்படையான நிபந்தனைகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த கேஒய்சி என்றால் என்ன? அதன் முக்கியத்துவமும் பயன்பாடும் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் (Know Your Customer) என்று ஆங்கிலத்தில் கூறுவதைத் தான் கேஒய்சி (KYC) என்று சுருக்கமாகச் சொல்கிறார்கள். பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரைப் பற்றித் தெரிந்துகொள்ள மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைதான் கேஒய்சி.
வங்கியைப் பொறுத்தவரை ஒரு அக்கவுண்ட்டின் உண்மையான உரிமையாளர் யார்? அதன் நாமினி யார்? இந்த அக்கவுண்ட்டுக்கு வரும் பணம் எங்கிருந்து வருகிறது? கணக்கு வைத்திருப்பவர் செய்யும் தொழில் என்ன? அவரது வங்கி பரிவர்த்தனைகளுக்கான காரணங்கள் எவை? என பல விவரங்களை அறிய கேஒய்சி முறை தேவைப்படுகிறது.
உமங் ஆப் மூலம் PF அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ!
கே.ஒய்.சி. (KYC) என்றால் என்ன?
ஒரு வாடிக்கையாளர் மூலம் வங்கிக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால், அதை வங்கி நிர்வாகம் கையாளுவதற்கும் கேஒய்சி உதவியாக இருக்கும். கேஒய்சி முறையின் இன்னொரு நோக்கம் பணப் பரிவர்த்தனையை முறைகேடுகளை ஒழிப்பதாகும்.
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரி சான்றுகளை சேகரித்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக அடையாளச் சான்றில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது. ஆனால் முகவரி சான்று மாறக்கூடியது. இதனால், வங்கிகள் அவ்வப்போது முகவரியை சரிபார்த்து அப்டேட் செய்துகொள்ள கோருகிறது. இதற்காக, வாடிக்கையாளரின் பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் ஒன்றை சரி பார்ப்பது வழக்கம்.
ரிசர்வ் வங்கியின் 1949ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7 வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை வங்கிகள் பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வங்கி டெபாசிட்கள் தொடர்பான வரையறையையும் ரிசர்வ் வங்கி தெளிவாக வழங்கியுள்ளது. ஆனால், முதலீடு செய்யும் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை சரிபார்ப்பது வங்கியை பொறுத்து மாறுபடும். ஆனால், பெரும்பாலான வங்கிகள் பணமோசடியைத் தடுக்க டெபாசிட்களுக்கும் கேஒய்சி சரிபார்ப்பை பின்பற்றுகின்றன.
2036இல் இந்தியாவின் மக்கள்தொகை 152 கோடியைத் தாண்டும்: மத்திய அரசு தகவல்