நிலவில் நில அதிர்வுகளை பதிவு செய்த சந்திரயான்-3! ILSA பதிவுகளை வரைபடத்துடன் விளக்கும் இஸ்ரோ!

சந்திரயான்-3 விக்ரம் லேண்டரில் உள்ள ILSA கருவி நிலவில் ரோவர் மற்றும் பிற கருவிகளின் இயக்கங்கள் காரணமாக ஏற்படும் அதிர்வுகளை பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Chandrayaan 3: ILSA payload in Vikram Lander listens to the movements around the landing site sgb

நிலவில் சந்திரயான்-3 திட்டத்தின் ஆய்வுகள் ஒரு வாரத்துக்கும் மேலாக வெற்றிகரமாக நடந்துவரும் நிலையில், விக்ரம் லேண்டரில் உள்ள ILSA கருவி நிலவில் நில அதிர்வுகள் குறித்து பதிவு செய்துள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் நிலவின் நில அதிர்வு நடவடிக்கைகளை பதிவு செய்வதற்கான ILSA கருவி உள்ளது. மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் (MEMS) தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கருவியை இஸ்ரோ முதல் முறையாக நிலவில் ஆய்வுக்கு பயன்படுத்துகிறது.

இந்தக் கருவியில் நிலவில் ரோவர் மற்றும் பிற கருவிகளின் இயக்கங்கள் காரணமாக ஏற்படும் அதிர்வுகளை பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ILSA ஆறு உயர் உணர்திறன் கொண்ட அக்ஸிலேட்டர்களைக் கொண்டிருக்கிறது. இவை சிலிக்கான் மைக்ரோமச்சினிங் (Silicon Micromachining) செயல்முறையைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.

சுழன்று விளையாடிய பிரக்யான் ரோவர்! பார்த்து ரசித்த விக்ரம் லேண்டர்! இஸ்ரோ சொன்ன குட்டி ஸ்டோரி!

"இயற்கையான நிலநடுக்கங்கள் மற்றும் செயற்கை நிகழ்வுகளால் ஏற்படும் நில அதிர்வுகளை அளவிடுவதே ILSA கருவியின் முதன்மை நோக்கமாகும். ஆகஸ்ட் 25, 2023 அன்று ரோவர் தரையிறங்கியபோது பதிவான அதிர்வுகள் வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பின், ஆகஸ்ட் 26, 2023 அன்று பதிவுசெய்யப்பட்ட மற்றொரு அதிர்வும் வரைபடத்தில் உள்ளது. இது இயற்கையான நிகழ்வு தான் எனக் கருதப்படுகிறது. அந்த அதிர்வு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

"ILSA கருவி தனியார் தொழில்துறைகளின் ஆதரவுடன் பெங்களூரில் உள்ள LEOS ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டது. ILSA கருவியை நிலவின் ஆய்வு செய்ய பயன்படுத்துவதற்கு ஏற்ற அமைப்பு பெங்களூருவில் உள்ள URSC ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது" என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முன்னதாக, இன்று இஸ்ரோ வெளியிட்ட மற்றொரு தகவலில் நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதைக் கண்டறிந்திருப்பதாவும்  தெரிவித்திருக்கிறது. பிரக்யான் ரோவர் புதிய பாதையில் செல்ல பாதையைத் தேடி சுழலும் காட்சியையும் வீடியோவாகப் பகிர்ந்துள்ளது.

ஆதித்யா எல்1 முக்கிய ஆய்வுக் கருவியை வடிவமைத்தது யார்? இதுதான் ரொம்ப முக்கியம்? இஸ்ரோ விளக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios