Asianet News TamilAsianet News Tamil

தினமும் 2GB டேட்டா, 395 நாட்கள் வேலிடிட்டி - மாஸ் காட்டும் பி.எஸ். என். எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் நீண்ட கால வேலிடிட்டி வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.

BSNL Rs 797 recharge plan introduced with 2GB daily data 395 days validity
Author
Tamil Nadu, First Published Mar 17, 2022, 3:39 PM IST

பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் தனது பிரீபெயிட் சந்தாதாரர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 797 விலையில் கிடைக்கும் புதிய பி.எஸ்.என்.எல்.  சலுகை 395 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. எனினும், இதில் சில ட்விஸ்ட்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று பி.எஸ்.என்.எல்.  ரூ. 797 சலுகை 395 நாட்களுக்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. அறிமுக சலுகையாக பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் 30 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது. பி.எஸ்.என்.எல்.  ரூ. 797 சலுகையில் வழங்கப்படும் பலன்கள் முதல் 60 நாட்களுக்கு மட்டும் பொருந்தும். அதன்பின் டாக்டைம், டேட்டா மற்றும் இதர பலன்களுக்கு பயனர்கள் தனியே ரிசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

BSNL Rs 797 recharge plan introduced with 2GB daily data 395 days validity

பி.எஸ்.என்.எல். ரூ. 797 பலன்கள்:

பி.எஸ்.என்.எல்.  ரூ. 797 சலுகையில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் ரி சார்ஜ் செய்ததில் இருந்து முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதன்பின் இந்த பலன்கள் எதையும் பயனர்களால் பயன்படுத்த முடியாது. மேலும் டேட்டா வேகமும் 60Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். 

ரிசார்ஜ் செய்ததில் இருந்து சரியாக 61-வது நாள் சலுகையில் வழங்கப்பட்டு வந்த மொபைல் டேட்டா, இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விடும். இதன் காரணமாக பயனர்கள் தொடர்ந்து இந்த சலுகைகளை பயன்படுத்த அதற்கேற்ற ரி சார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் வேண்டும்.

BSNL Rs 797 recharge plan introduced with 2GB daily data 395 days validity

புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆகஸ்ட் 15, 2022 முதல் 4ஜி சேவைகளை இந்தியாவில் வழங்க இருக்கிறது. 4ஜி சேவைகளை வழங்குவதற்கான அடிப்படை சோதனைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனைகளும் நடைபெற்று வருகிறது என டெலிமேடிக்ஸ் துறை வளர்ச்சி குழுவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் ராஜ்குமார் உபத்யய் தெரிவித்து இருக்கிறார்.

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இவை விரைவில் 5ஜி சேவைகளை இந்தியாவில் வழங்கலாம் என கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios