RS.499 க்கு BSNL மொபைல்...! அறிமுகமானது "D1"..! இன்றே முந்துங்கள்..!
BSNL நிறுவனம் Detel நிறுவனத்துடன் இணைந்து,D1 என்ற புதிய போனை அறிமுகம் செய்துள்ளது.
மிகவும் மலிவான விலையில் RS.499 க்கு BSNL மொபைல் கிடைப்பதால், இந்த மொபைல் போனை வாங்குவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rs 153 tariff plan
ரூ.103 ரூபாய்கான டாக்டைம் கிடைக்கும்
BSNL-BSNL 15 பைசா/ஒரு நிமிடத்திற்கு
மற்ற சேவைகளுக்கு – ஒரு நிமிடத்திற்கு 40 பைசா
சிறப்பம்சங்கள்
1.44-inch
சிங்கள் சிம் மட்டும் தான் பயன்படுத்த முடியும்
650mAh
டார்ச் லைட்
போன்புக்
எப்எம்ரேடியோ
ஸ்பீக்கர்,வைப்ரேஷன் மோட் இருக்கிறது
அதாவது 10 வருடங்களுக்கு முன்பாக,நோக்கியா100 என்ற போன் மிகவும் பிரபலமானது.
அன்று முதல் இன்று வரை எத்தனை மாடல்கள் மொபைல் வந்தாலும், பழைய மாடலான நோக்கியா 100 போன்ற மாடல் தற்போது வரை வேறு எதிலும் இல்லை என்றே கூறலாம்.
அதே வேளையில் இன்றளவும், பெரியவர்கள் பயன்படுத்த விருப்பம் தெரிவிக்கும் மொபைல் இதுபோன்ற பேசிக் ஆப்ஷன்கள் கொண்டதை தான்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள மலிவு விலை BSNL போன் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மலிவு விலையில் கிடைப்பதால் இதுவரை போன் பயன்படுத்தாதவர்கள் கூட இனி பயன்படுத்த தொடங்குவர்.