ரிலையன்ஸ்  ஜியோ  அறிவித்த அட்டகாச சலுகையை அடுத்து பல  வாடிக்கையாளர்களை  தன் வசம் வைத்துள்ளது  ஜியோ. இந்நிலையில் ஜியோவுடனான  போட்டியை சமாளிக்க  பல  தொலைதொடர்பு   நிறுவனங்கள்  போட்டிபோட்டுக்கொண்டு  சலுகையை  வாரி  வழங்குகிறது. அதன்படி, தற்போது , பி  எஸ் என் எல்  நிறுவனம்,   குடியரசு தின  போனஸாக  3  விதமான ப்ரீ பெய்ட்  சலுகையை  அறிமுகம் செய்துள்ளது .

அதன்படி,      

ஜனவரி 25   முதல்  31   வரை

26  ரூபாய்க்கு ரீசார்ஜ்  செய்தால், 26 மணி  நேரம்  நேரத்திற்கு மட்டும் ,  ப்ரீ லோக்கல்  வாய்ஸ்  கால்ஸ் செய்யலாம். இந்த  சலுகை  ஜனவரி 25   முதல்  31   வரை  மட்டுமே  என்பது குறிபிடத்தக்கது.

 ‘Combo 2601’ (Rs 2,601):

2ஆயிரத்து  601 ரூபாய்க்கு  ரீசார்ஜ்  செய்தால், 2,600 ரூபாய்கான டாக் டைம்  முதல் நிலை  கணக்கில்  சேரும். அடுத்ததாக 1,300 ரூபாய்க்கான டாக்  டைம்  இரண்டாம்   நிலை  கணக்கில் சேரும். இதற்கான  கால அவகாசம்  3  மாதங்கள்  மட்டுமே. இதற்குள் இரண்டாம் நிலை  கணக்கில்  உள்ள  டாக்  டைம் பயன்படுத்திக்கொள்ள  வேண்டும். மேலும்,  முதல் நிலை கணக்கில்  உள்ள  டாக் டைம் எப்பொழுது வேண்டுமென்றாலும்,பயன்படுத்திக்கொள்ளலாம். கால அவகாசம் கிடையாது.  

Combo 6801( Rs 6,801 )   :

6 ஆயிரத்து 801  ரூபாய்க்கு  ரீசார்ஜ்  செய்தால், 6800  ரூபாய்க்கான  டாக்  டைம் , முதல்  நிலை கணக்கில்  சேரும்.  அடுத்ததாக இரண்டாம் நிலை  கணக்கிலும்  அதே  அளவிலான 6800  ரூபாய்க்கான  டாக்  டைம் சேரும். கால அவகாசம்  மேல்   குறிப்பிட்டுள்ளவை போன்றே ....

இந்த  இரண்டு சலுகைகளும்க் மக்களிடையே நல் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிபிடத்தக்கது.