Asianet News TamilAsianet News Tamil

M3 மேக்புக் ப்ரோ மாடல்களில் புதுமை செய்த ஆப்பிள்! டிஸ்பிளே 20% ப்ரைட்டா இருக்குமாம்!

புதிய 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் 20 சதவீதம் பிரகாசமான டிஸ்பிளேயைக்க கொண்டுள்ளன என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

Apple M3 MacBook Pro models feature a 20 percent brighter display sgb
Author
First Published Nov 1, 2023, 6:34 PM IST

ஆப்பிள் நிறுவனம் புதிய 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களை ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. இந்த லேப்டாப்கள் ஆப்பிள் அறிமுகப்படுத்திய புதிய நM3 சிப்செட்களால் இயக்கப்படுகிறது. M3 பிராசஸர் கொண்ட MacBook Pro மாடல்கள் குறிப்பிடத்தக்க CPU மற்றும் GPU செயல்திறன் மேம்படுத்தல்களை வழங்குகின்றன.

இது தவிர, புதிய 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் 20 சதவீதம் பிரகாசமான டிஸ்பிளேயைக்க கொண்டுள்ளன என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த லேப்டாப்கள் பற்றி அளித்துள்ள தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி, புதிய 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் அனைத்திலும் உள்ள டிஸ்பிளேயில் SDR கண்டென்ட் 600 நிட்ஸ் வரை பிரகாசமானதாக இருக்கும். இது முந்தை மாடல்களில் 500 நிட்ஸ் வரை மட்டுமே இருந்தது. இதேபோல HDR வீடியோ மற்றும் போட்டோக்களையும் இந்த மாடல்களில் 1,600 நிட்ஸ் பிரகாசத்துடன் பார்க்க முடியும்.

மேலும் இந்த மேக்புக் ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள லிக்யுட் ரெட்டினா எக்ஸ்டிஆர் (Liquid Retina XDR) டிஸ்ப்ளே உலகின் சிறந்த லேப்டாப் டிஸ்ப்ளே ஆகும் என்றும ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது.

14-இன்ச் மற்றும் 16-இன்ச் M3-இயங்கும் மேக்புக் ப்ரோ மாடல்கள் இப்போது முன்பதிவு செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் இந்த லேப்டாப்களை ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோர் செயலியிலும் முன்பதிவு செய்யலாம். இந்தியா உட்பட 27 நாடுகளில் இந்த லேப்டாப்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

இந்த லேப்டாப்களை ஆப்பிள் ஸ்டோர்களிலும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களர்களிடமும் நவம்பர் 7 முதல் நேரில் வாங்கலாம். நேரில் வாங்கும்போதும் டோர் டெலிவரி ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.

ஆப்பிளின் சமீபத்திய மேக்புக் லேப்டாப்கள் கேமிங் தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை. ரே டிரேசிங் போன்ற புதிய அம்சங்கள் உள்ளன. தனித்துவமான ஆடியோ அனுபவத்தை வழங்க ஆறு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios