வெயிலை சமாளிக்க புது டெக்னீக்... பழைய டெக்னலாஜிக்கு திரும்பிய சுவாரஸ்யம்!!
கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க மக்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒருவர் தனது காரை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கார் முழுவதும் மாட்டுச் சாணத்தைப் பூசி வெளியிட்ட கார் போட்டோ வலைதளங்களில் வேகமாக வைரலாகிவிட்டன.

குஜராத்தில் ரூபேஷ் கவுரங்க தாஸ் என்பவர் போட்டோக்களை பதிவிட்டு, நான் பார்த்ததிலேயே மாட்டுச் சாணத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியவர் இவர்தான். இது அம்தாவாத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 45 டிகிரி வெயிலைச் சமாளிக்கவும், கார் சூடாவதைத் தடுக்கவும் திருமதி செஜல் ஷா அவர்கள் தனது கார் முழுவதும் பசு சாணத்தைப் பூசியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இந்த டெக்னிக் பலரை ஆச்சரியப்படுத்தியது.
இந்த டெக்னிக்கால் வாகனம் நிஜமாகவே வெப்பத்தைத் தாங்குகிறதா என்று மற்ற வாகன ஓட்டிகளும் கேள்வியெழுப்பியுள்ளனர். இது ஒருபுறமிருக்க காரில் பசு சாணமா என்று நெட்டிசன்கள் கேலி செய்யத் தொடங்கிவிட்டனர். கிராமப்புறங்களில் வீடுகளின் சுவர்களிலும் தரையிலும் மாட்டுச் சாணம் பூசப்படுவது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மாட்டு சாணம் கிருமிநாசினியாகவும், கொசு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி பல தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.