மீண்டும் வருகிறது கலர்புல் நோக்கியா 3310…!  விலை 4,189  மட்டுமே....

again coming-nokia-3310


மீண்டும் வருகிறது கலர்புல் நோக்கியா 3310…!  விலை 4,189  மட்டுமே....

நோக்கியா மொபைல் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனி சிறப்பு தான். நோக்கியாவின்  எத்தனையோ மாடல்  மொபைல் வந்தாலும் நோக்கியா 331௦  என்றும்  தனி  சிறப்பு  கொண்டது

இந்நிலையில்  மீண்டும் நோக்கியா 331௦ வெளிவர உள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது இது  குறித்த  ஒரு  அலசல்  பார்க்கலாம் .

2௦17 ஆம் ஆண்டுக்கான, மொபைல் காங்கிரஸ் மாநாட்டில், இந்த மொபைல் வெளிவர உள்ளது. இதனுடன்  நோக்கியா 3,  நோக்கியா 5, நோக்கியா 6  வெளிவர  உள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது.

நோக்கியா 3310 சிறப்பம்சங்கள்

தற்போது  வெளிவரவுள்ள  இந்த நோக்கியா  பியூச்சர்போன், பழைய நோக்கியா 3310 இல் இருந்து சிறிது  வேறுபடுகிறது. அதன்படி திக்னஸ் , எடை மற்றும் கலர்  இவை மூன்றிலும்  வேறுப்படுகிறது.

மேலும் பிசிகல் கீ பேட் வேறுப்படுகிறது. இதில் கீ சற்று சிறியதாகவும், சுலபமாக பயன்படுத்தும் விதத்திலும்  இருக்கும்.

டிஸ்ப்ளே பொறுத்தவரை ,பெரிய  அளவிலும், கலர்புல்லாகவும்  இருக்கும் .  

எந்தெந்த கலரில்  கிடைக்கும் ?

Red, Green , Yellow, classic Grey, Black, Blue,  Ash  உள்ளிட்ட  பல  கலர்களில்   நோக்கியா 3310 கிடைக்கப்பெரும்

விலை : 4,189  மட்டுமே என்பது  குறிப்பிடத்தக்கது

 

 

 

       

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios