ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகளில் ஒன்றான HEL1OS என்ற எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அக்டோபர் 29, 2023 அன்று சூரிய எரிப்பு கதிர்களை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய லாக்ரேஞ்ச் புள்ளியை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அதன் சூரிய ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க புதிய தகவலை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகளில் ஒன்றான HEL1OS என்ற எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அக்டோபர் 29, 2023 அன்று சூரிய எரிப்பு கதிர்களை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது.

வாட்ஸ்அப்பில் ஈமெயில் வெரிஃபிகேஷன் வசதி அறிமுகம்! இனி மொபைர் நம்பர் தேவையில்ல!

Scroll to load tweet…

சூரியனின் மேற்பரப்பு மற்றும் வெளிப்புற வளிமண்டலத்தில் திடீர் வெடிப்பு ஏற்பட்டு தோன்றும் ஆற்றல் மற்றும் கதிர்வீச்சு சூரிய எரிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கதிர்வீச்சு பொதுவாக எக்ஸ்-ரே மற்றும் புறஊதா (UV) கதிர்களின் வடிவத்தில் தோன்றும். சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள காந்த ஆற்றலின் வெளியீட்டால் இதுபோன்ற சூரிய எரிப்பு ஏற்படுகிறது.

செப்டம்பர் 2, 2023 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்பட்டது. சூரியனின் இயக்கவியல் மற்றும் பூமியின் காலநிலையில் அதன் தாக்கம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.

நம்பரை மாற்றினால் வாட்ஸ்அப் பிரைவசி கேள்விக்குறி? உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு