அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 வெர்சிஸ் 650 இந்தியாவில் அறிமுகம்... விலை இவ்வளவு தானா?

2022 கவாசகி வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிளில் ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லைட் டிசைன், 4 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய வைசர் வழங்கப்பட்டு இருக்கிறது.

2022 kawasaki versys 650 india price starts at rs 7.36 lakhs

இந்தியா கவாசகி மோட்டார் நிறுவனம் 2022 வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் 2022 ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 2022 கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 36 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 21 ஆயிரம் அதிகம் ஆகும். 

இதையும் படியுங்கள்: இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஸ்கார்பியோ கிளாசிக்... விலை எவ்வளவு தெரியுமா?

புதிய 2022 கவாசகி வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிள் மாடலில் ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லைட் டிசைன், 4 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய வைசர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் என்ஜின் கவர் மாற்றப்பட்டு தற்போது சற்றே கூர்மையாக காட்சி அளிக்கிறது. 

இதையும் படியுங்கள்: பி.எம்.டபிள்யூ. உடன் சேர்ந்து புது எலெக்ட்ரிக் 2 வீலர் உருவாக்கும் டி.வி.எஸ். - வெளியான சூப்பர் தகவல்..!

2022 கவாசகி வெர்சிஸ் மாடலில் புதிய டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், 2 லெவல் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் பேண்டம் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. 

2022 kawasaki versys 650 india price starts at rs 7.36 lakhs

இதையும் படியுங்கள்: ரூ. 11 லட்சம் விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கவாசகி நிறுவனத்தின் மிடில்வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளான கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் 649சிசி ல்கிவிட் கூல்டு, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 65 ஹெச்.பி. பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 41 மில்லிமீட்டர் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் ஆஃப்செட் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

பிரேக்கிங்கிற்கு முன்புறம் டூயல் 300 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 250 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் புதிய மிடில் வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660, ஹோண்டா CB500X மற்றும் சுசுகி வி ஸ்டாம் 650XT போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios