பி.எம்.டபிள்யூ. உடன் சேர்ந்து புது எலெக்ட்ரிக் 2 வீலர் உருவாக்கும் டி.வி.எஸ். - வெளியான சூப்பர் தகவல்..!
டி.வி.எஸ். நிறுவனம் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்துடன் இணைந்து 15 கிலோவாட் ஹவர் ரேன்ஜ் பிரிவில் புது மாடலை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளன. இந்த நிலையில், டி.வி.எஸ். நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன துறையில் தனது கவனத்தை அதிகப்படுத்த முடிவு செய்து உள்ளது. ஓசூரை சேர்ந்த வாகன உற்பத்தியாளரான டி.வி.எஸ். எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தனது எதிர்கால திட்டம் பற்றி அறிவித்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ரூ. 11 லட்சம் விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தற்போது டி.வி.எஸ். நிறுவனம் தனது ஐகியூப் மாடலை இந்திய சந்தையில் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. இது மட்டும் இன்றி டி.வி.எஸ். நிறுவனம் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்துடன் இணைந்து 15 கிலோவாட் ஹவர் ரேன்ஜ் பிரிவில் புது மாடலை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இத்துடன் 5-25 கிலோ வாட் ஹவர் ரேன்ஜ் கொண்ட இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களையும் டி.வி.எஸ். நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இதையும் படியுங்கள்: அழகாய் உருவாகும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்... அசத்தல் டீசர்கள் வெளியீடு..!
டி.வி.எஸ். மட்டும் இன்றி அதன் துணை நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள், எலெக்ட்ரிக் சூப்பர் பைக் ஒன்றை உருவாக்கி வருகிறது. இது லண்டனில் பிரீமியம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் ஸ்விஸ் நாட்டு இ மொபிலிட்டி குழுமத்தை விலை வாங்கி இருப்பதன் மூலம் டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வளர்ச்சிக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்: ரெட்ரோ டிசைன், 4 வீல் டிரைவ் வசதியுடன் புது ஆல்டோ அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?
இது மட்டும் இன்றி டி.வி.எஸ். நிறுவனம் ஜியோ-பிபி உடன் இணைந்து நாடு முழுக்க சார்ஜிங் நெட்வொர்க் அமைப்பதற்கான கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இரு நிறுவனங்கள் இணைந்து வழக்கமான AC சார்ஜிங் நெட்வொர்க் மற்றும் DC பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்-ஐ உருவாக்க இருக்கின்றன.
2021-22 நிதியாண்டு வாக்கில் டி.வி.எஸ். நிறுவனம் 10 ஆயிரத்து 700 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருந்தது. தற்போது ஒட்டுமொத்த ஸ்கூட்டர் சந்தையில் பத்து சதவீத யூனிட்கள் எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும். ஸ்விஸ் இ மொபிலிட்டி குழுமம் ஏற்கனவே லாபம் ஈட்டித் தரும் நிலையில், இகோ (EGO) மூலம் ஐரோப்பிய எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல டி.வி.எஸ். நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.