Asianet News TamilAsianet News Tamil

அழகாய் உருவாகும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்... அசத்தல் டீசர்கள் வெளியீடு..!

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் மாடல் ஹூண்டாய் பெர்செப்ட் கான்செப்ட்-ஐ தழுவி உருவாகி வருகிறது. 

Hyundai IONIQ 6 New Teasers out Ahead Of launch
Author
India, First Published Jun 28, 2022, 3:50 PM IST

ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. டீசர்களில் புதிய ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரின் வெளிப்புற தோற்றம் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் மாடல் ஹூண்டாய் பெர்செப்ட் கான்செப்ட்-ஐ தழுவி உருவாகி வருகிறது. இந்த காருக்கான முந்தைய டீசர்களில் காரின் ஏரோனைமிக் வடிவங்கள் இடம்பெற்று இருந்தன.

இதையும் படியுங்கள்: தொடர் சோதனையில் ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 - இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்கள்..!

தற்போது வெளியாகி இருக்கும் புது டீசர்களில் காரின் பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் மற்றும் காரின் ஒட்டுமொத்த டிசைன் இடம்பெற்று உள்ளது. அதில் புதிய கார் ஹூண்டாய் நிறுவனத்தின் தற்போதைய இண்டர்னல் கம்பஷன் மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என தெரியவந்து இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: ரெட்ரோ டிசைன், 4 வீல் டிரைவ் வசதியுடன் புது ஆல்டோ அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

முற்றிலும் புது ஹூண்டாய்  ஐயோனிக் 6 மாடலில் மிக மெல்லிய ஹெட்லேம்ப்கள், பாராமெட்ரிக் பிக்சல் எல்.இ.டி. டே டைம் ரன்னிங் லைட்கள் உள்ளன. பக்கவாட்டுகளில் மிக அழகான டிசைன் கொண்டிருக்கிறது. இதில் ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய இண்டர்னல் கம்பஷன் மாடல்களில் இடம்பெற்று இருக்கும் கிரீஸ்கள், கட்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த காரில் கேமரா சார்ந்த விங் மிரர்கள் உள்ளன. 

Hyundai IONIQ 6 New Teasers out Ahead Of launch

இதையும் படியுங்கள்: வரைவு மசோதாவுக்கு அனுமதி... இந்தியாவில் அமலுக்கு வரும் பாரத் NCAP... எப்போ தெரியுமா?

இந்த காரில் உள்ள பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் பின்புற லைட் கிளஸ்டர் யூனிட் டெயில் லேம்ப் கிளஸ்டர் இல்லாமல் மூன்றாவது ஸ்டாப் லேம்ப் ஆக உள்ளது. பின்புற பம்ப்பரில் பிளாக் நிற கிளாடிங், பாராமெட்ரிக் டிசைன் கொண்டு இருக்கிறது. புதிய ஐயோனிக் மாடல் எலெக்ட்ரிஃபை செய்யப்பட்ட ஸ்டிரீம்லைனர் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

ஐயோனிக் 6 ஹூண்டாய் நிறுவனத்தின் பர்பஸ் பில்ட் e-GMP பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் இரண்டாவது மாடல் ஆகும். முதலில் இந்த பிளாட்பார்ம் கொண்ட முதல் மாடலாக ஹூண்டாய் ஐயோனிக் 5 அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. புதிய ஐயோனிக் 6 மாடலும் சர்வதேச சந்தையில் சிங்கில் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் பவர்டிரெயின்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

வரும் நாட்களில் முற்றிலும் புதிய ஐயோனிக் 6 மாடலின் டிசைன் அறிமுகம் செய்யப்படும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து புதிய ஐயோனிக் 6 பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் இண்டீரியர் அம்சங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios