மூவர்ண கொடியேந்திய இளைஞரின் உருவம்.. சாக்பீசில் செதுக்கிய நேர்த்தி - இளம் சிற்பி அசத்தல்!
போடிநாயக்கனூரில் இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்தில் சாக்பீசில் தேசிய மூவர்ண கொடியேந்திய இளைஞர் உருவ சிலை செய்து இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வசித்து வருபவர் பிரேம்குமார் என்ற இளைஞர். இவர் சாக்பீஸ் மற்றும் பென்சில்களில் பல்வேறு உருவங்களை சிற்பங்களாக உருவாக்கி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவருகின்றார்.
இந்த சூழல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவின் 76வது ஆண்டு கொண்டாட்ட நிறைவு மற்றும் 77வது சுதந்திர திருவிழா கொண்டாட்டத்தின் தொடக்கத்தை முன்னிட்டு, போர்டில் எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் சாக்பீஸ் கட்டியில் இந்திய இளைஞர் ஒருவர், நமது தேசிய மூவர்ணக் கொடியை ஏந்தி நிற்பது போல் ஒரு சிற்பத்தை செதுக்கி அதற்கு வர்ணம் பூசி உள்ளார்.
“நீட் விவகாரத்தில் ஆளுநர் அறியாமையில் பேசுகிறார்” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
சாக்பீஸில் இது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்ட பொழுது, இந்தியாவின் சுதந்திர தினம் இளைஞர்களால் போற்றப்பட வேண்டும் என்றும், தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த சாக்பீஸ் சிற்பம் செதுக்கப்பட்டதாக கருத்து தெரிவித்தார் அந்த இளைஞர்.
சுமார் 45 நிமிடம் செலவழிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த சாக்பீஸ் சிற்பம் அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அஸ்திரத்தை கையில் எடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் - நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்