Yellow Fever: அரசு மரு்ததுவமனையில் போடப்படும் தடுப்பூசி மட்டுமே விமான நிலையத்தில் ஏற்கப்படும் - அமைச்சர் தகவல்

மஞ்சள் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆனால், அவை விமான நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Yellow fever vaccination administered at private hospitals are not accepted at the airport - Minister Subramanian vel

சென்னை கோட்டூர்புரம் சிக்னல் மற்றும் கோட்டூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் திமுக சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், கோடைகாலத்தில் தண்ணீர், இளநீர், தர்பூசணி, கீர்ணி பழம் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

ஆப்பிரிக்கா நாடுகளுக்கும், தென் அமெரிக்காவில் ஒரு சில நாடுகளுக்கும் செல்வதற்கு  தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அப்போது தான் விமான நிலையத்தில் அந்த நாடுகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கும். அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பும் போதும் இந்த தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்த பிறகு தான் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 

தஞ்சையில் உயிரிழந்த மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அனைவரையும் கண்கலங்கச் செய்த பெற்றோர்

இதற்காக  கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் ஏற்கனவே இந்த மஞ்சள் வேக்சினேஷன் போடப்பட்டு வந்தது. அதேபோல தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மஞ்சள் வேக்சினேஷன் போடப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. ஆனால் இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் தனியார் மருத்துவமனையில் மஞ்சள் வேக்சினேஷன் போடும்போது அதை விமான நிலையங்களில் அனுமதிப்பதில்லை. 

கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் அமைக்கப்பட்டிருப்பது போல துறைமுகம் மருத்துவமனை வளாகத்திலும் அதே போல தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் இருக்கக்கூடிய அந்த மையத்திலும் மஞ்சள் வேக்சினேசன் போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த வேக்சினேஷன் போடாமல் அரசு சார்பாக ஏற்படுத்தி இருக்க கூடிய இந்த இடங்களில் வேக்சினேஷன் போட்டு கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த காலங்களில் போல் இல்லாமல் டெங்கு காய்ச்சல் மிகப் பெரிய கட்டுப்பாட்டில் இருக்கிறது. காய்ச்சல் வரும் பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். வீட்டிலே சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும். 12ம் வகுப்பில் இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் தேர்ச்சி பெற தவறியவர்களுக்கு 104 என்கின்ற எண்ணின் மூலம் மனநல ஆலோசனை வழங்கி வருகிறோம். இந்த தேர்வுக்கு பிறகு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் என்பது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்ட வருகிறது. 

என் வயிறு எரியுது; நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு சாபம் விட்ட மாணவி ஸ்ரீமதியின் தாயார்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக 2021ல் இருந்து இந்த ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 51 ஆயிரத்து 919 மாணவர்களுக்கும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் 137 பேர் மன உளைச்சலில் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்களை தொடர்ச்சியாக துறையின் சார்பில் மனநல ஆலோசகர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கி வருகிறார்கள் என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios