அனைத்து நாள்களிலும் பெண்கள் வழிபடலாம்: பங்காரு அடிகளார் செய்த சமூக புரட்சி!
அனைத்து நாள்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற சமூக புரட்சிக்கு வித்திட்டவர் பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பங்காரு அடிகளாரின் பக்தர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பங்காரு அடிகளார், தன்னை பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களாலும் ‘அம்மா’ என்று அழைக்கப்படுகிறார். அதற்கு காரணமும் உண்டு. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாள்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி சமூக புரட்சிக்கு வித்திட்டவர் அவர்.
கோயில் கருவறைக்குள் ஆண்கள் மட்டுமே சென்று வந்த நிலையில், பெண்களும் செல்லலாம் என்ற புரட்சியை மேற்கொண்டவர் அவர். பெரும்பாலும், கோயில்களுக்கு ஆண்களே மாலை அணிந்து சென்று வந்தபோது, மேல்மருவத்தூர் கோயிலுக்கு பெண்கள் மாலை அணிந்து சிவப்பு ஆடை உடுத்தி சென்றனர். இன்று வரை ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை போட்டுக் கொண்டு செல்லும் பெண் பக்தர்கள் கோயில் கருவறையில் உள்ள சுயம்புவுக்கு அபிஷேகம் செய்யலாம்.
மேல்மருத்துவர் பங்காரு அடிகளார் காலமானார்!
மாதவிடாய் என்பது சிறுநீர், மலம் போன்று ஒரு கழிவுதான் என்றும் அது பாவம் இல்லை என்றும் கூறி, மாதவிடாய் காலத்திலும் பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்ல அனுமதித்தவர் சமூக நீதிக்கு வித்திட்டவர் பங்காரு அடிகளார்.
பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சேவையைப் பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்தது. பெண்களுக்கான சமூக புரட்சி தவிர, கல்வியிலும் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் நடத்தப்படுகின்றன.