மேல்மருத்துவர் பங்காரு அடிகளார் காலமானார்!
மேல்மருத்துவர் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82. உடல் நலக்குறைவால் அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வந்தார்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாள்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்திய பங்காரு அடிகளார், தன்னை பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களாலும் ‘அம்மா’ என்று அழைக்கப்படுகிறார்.
கடந்த ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் பங்காரு அடிகளார் சிகிச்சை பெற்று வந்து நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தனது 83ஆவது பிறந்தநாளை பங்காரு அடிகளார் கொண்டாடிய நிலையில், தற்போது அவரது உயிர் பிரிந்துள்ளது.
பங்காரு அடிகளாரின் மறைவு அவரது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேல்மருவத்தூர் கோயிலில் போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.