சென்னை கோயம்பேட்டில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறாத முதல்வர் ஸ்டாலின், ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதை எல்.முருகன் கடுமையாக விமர்சித்தார்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் 5 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையின் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

போலி வேடம் போடுகிறார் முதல்வர் ஸ்டாலின்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: தமிழக முதலமைச்சர் என்கிற முறையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை முதல்வர் கூற வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை, நாங்களும் வலியுறுத்தி வருகின்றோம் என தெரிவித்தார். கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். அதற்கு அங்குள்ள ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். போலி வேடம் போடுகிறார் முதல்வர் ஸ்டாலின் என கடுமையாக விமர்சனம் வைத்தார்.

ஐயப்பன் புனிதத்தை ஸ்டாலின் கெடுக்கக்கூடாது

நான் வேல் யாத்திரை நடத்திய போது அப்பாவும் மகனும் சேர்ந்து வேல் பிடித்ததாகவும் வெளியில் கடவுள் மறுப்பு பேசிவிட்டு வீட்டுக்குள் சாமி கும்பிடுகின்றார்கள் என அடுக்கடுக்கான விமர்சனத்தை வைத்தார். கேரளாவில் நடக்க இருக்கிறார் ஐயப்பன் பக்தர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டு ஐயப்பன் புனிதத்தை ஸ்டாலின் கெடுக்கக்கூடாது. பீகார் சென்றுள்ள முதல்வர் அங்கு இந்தியில்தான் பேசியாக வேண்டும். ஆங்கிலத்தில் பேசினால் அங்கு இருப்பவர்களுக்கு புரியாது. மும்மொழி கல்விக் கொள்கை அவசியம். ஸ்டாம்ப் ஒட்டுவதுபோல் தேசிய கல்வி கொள்கையை காப்பி அடித்திருக்கிறார்கள். ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்க கூடாது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாமல் மற்ற பண்டிக்கைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுகிறார். எதிர்ப்பு வலுத்துள்ளதால் தன்னுடைய பிரதிநிதிகளை ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு அனுப்பி வைக்க உள்ளார்.

காலை உணவுத் திட்டம்

வரும் தேர்தலில் திமுக மிகப்பெரும் தோல்வியை தழுவ உள்ளது. காலை உணவுத் திட்டம் சரியாக, முறையாக குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். தேர்தல் ஆணையம் சுதந்திரமானது, அதன் செயல்பாடுகள் வெளிப்படையானது. தெலுங்கானா கர்நாடகா தமிழ்நாட்டில் இண்டி கூட்டணி வெற்றி பெற்றபோது மட்டும் தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதா.?

திமுக நம்பிக்கை துரோகம்

திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்று. சிலிண்டர் மானியம் , டாஸ்மாக் குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக நம்பிக்கை துரோகம் செய்யும் கட்சியாகவே உள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கம் நூற்றாண்டு கண்ட சமூக இயக்கம். நேரு , அம்பேத்கரே ஆர்எஸ்எஸ் பற்றி புகழ்ந்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் இயக்கம்

சென்னையில் வெள்ளம் வரும்போது முதல் களப்பணியாளர்கள் ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுக கேட்பதாக விஜய் கூறுவதாக கேட்கிறீர். ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுக கேட்டால் அது வரவேற்கத்தக்கது. விஜய்யும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொண்டு அதன் பிறகு விமர்சிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.