Asianet News TamilAsianet News Tamil

எல்லாமே விலை உயர்ந்தால் என்ன தான் பன்றது? தாறுமாறாக உயர்ந்த மளிகைப் பொருட்களின் விலை.. எவ்வளவு தெரியுமா?

காய்கறி விலை உயர்வால் சாமானிய மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

What if everything gets expensive? Do you know how much the price of grocery items is paradoxically high?
Author
First Published Jul 8, 2023, 10:42 AM IST | Last Updated Jul 8, 2023, 10:47 AM IST

நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 – 140 வரை விற்பனையாகிறது. தக்காளி மட்டுமல்ல பச்சைமிளகாய், இஞ்சி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பழங்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, இல்லத்தரசிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

மளிகை பொருட்களை பொறுத்தவரை துவரம் பருப்பு, பாசி பருப்பு, அரிசி என அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளன. குறிப்பாக சீரகம் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ சீரகத்தின் விலை ரூ.200, ரூ.250 என இருந்த நிலையில் தற்போது கிலோ ரூ.600 முதல் ரூ.650 வரை விற்பனை செய்யப்படுகிறது.

  மளிகை பொருட்கள்  முந்தைய விலை  தற்போதைய விலை
 துவரம் பருப்பு       ரூ.118   ரூ.160
 உளுத்தம் பருப்பு  ரூ.112  ரூ.124
 பாசி பருப்பு  ரூ.91  ரூ.102
 கடலை பருப்பு   ரூ.61  ரூ.66
 சீரகம்   ரூ.300  ரூ.680
 மிளகு   ரூ.500  ரூ.550
 வெந்தயம்  ரூ.75  ரூ.84
 கடுகு   ரூ.70  ரூ.74
 புளி   ரூ.110  ரூ.150
 பூண்டு   ரூ.80   ரூ.150
 காய்ந்த மிளகாய்  ரூ.230  ரூ.260
 சுக்கு   ரூ.260  ரூ.350
 வேர்க்கடலை   ரூ.110  ரூ.125

இதனிடையே உணவு பாதுகாப்பை அதிகரிக்க, மத்திய மாநில அரசுகள் குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்கு, சாதாரண கிடங்கு அமைக்க 50% முதல் 70% வரை மானியம் வழங்கி வருகின்றனர். இதை பயன்படுத்தி நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் உணவு பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிகிறது. மொத்த வியாபாரிகள் அவ்வப்போது செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்துவது வழக்கம் என்றும், இதை தடுத்தால் 15 நாட்களில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் உணவு தானிய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு, தற்போது காய்கறி, மளிகை பொருட்களின் போன்றவற்றின் கடும் விலை உயர்வு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் FIR வெளியானது! தற்கொலைக்கு இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios