தவெக மாநாட்டில் பவுன்சர்கள் தூக்கி வீசியதில் நெஞ்சில் பலத்த அடி ஏற்பட்டதாக தவெக தொண்டர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
Vijay’s TVK Meet Chaos: Bouncers Face Police Complaint! தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடந்தது. சுமார் 2 லட்சம் தொண்டர்க்ள் முன்னிலையில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய், பாஜகவையும், திமுகவையும் நேரடியாக தாக்கினார். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவையும் விமர்சித்தார். முன்னதாக, மாநாட்டில் பங்கேற்க வந்த விஜய் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டு இருந்த ராம்ப் வாக்கில் நடந்து சென்றபோது தவெக தோண்டர்கள் சிலர் விஜய்யை பகக்த்தில் இருந்து காணும் ஆர்வத்தில் ராக் வாக் மீது ஏறினார்கள்.
தவெக தொண்டரை தூக்கி வீசிய விஜய் பவுன்சர்கள்
அப்போது விஜய்க்கு பாதுகாப்பாக வந்த பவுன்சர்கள், அவர்களை விஜய் பக்கம் நெருங்க விடாமல் பிடித்து தள்ளினார்கள். அப்போது ஒரு இளைஞரை பவுன்சர் ஒருவர் தூக்கி கீழே வீசியபோது அவர் ராம்ப் வாக் கம்பியில் பிடித்து தலைகீழாக தொங்கியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. பவுன்சர்கள் இப்படி காட்டுமிராண்டித்தனமாக் நடந்து கொள்ளக் கூடாது என பலரும் தெரிவித்தனர்.
தவெக தொண்டர் போலீசில் புகார்
இந்நிலையில், மதுரை தவெக மாநாட்டில் விஜய்யின் பவுன்சர்கள் தன்னை தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் போலீசில் புகாரளித்துள்ளார். இவர் தவெகவில் அடிப்படை உறுப்பினராக உள்ளதாக கூறப்படுகிறது. ''பவுன்சர்கள் தாக்கியதில் எனது நெஞ்சில் அடிபட்டது. நெஞ்சு வலிப்பதால் மருத்துவமனையில் சென்று பரிசோதிக்க போகிறேன்'' என்று போலீசில் புகார் அளித்த சரத்குமார் தெரிவித்தார்.
தவெக மாநாட்டில் தொடர் அசம்பாவிதம்
தவெக தொண்டர் புகாரளித்துள்ளது தவெகவினருக்கும், விஜய்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வழக்கறிஞர் ஒருவர் தவெக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என தரக்குறைவாக பேசிய விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே மாநாட்டின்போது கொடிக்கம்பம் சரிந்து கார் நொறுங்கியது, வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் மயக்கம், தவெக பேனர் கட்டிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி என பல்வேறு அசம்பாதவிங்கள் நிகழ்ந்தன.
விஜய் மீது பாயும் திமுக, அதிமுக, பாஜக
மேலும் மாநாட்டில் பேசிய விஜய் ''ஸ்டாலின் அங்கிள், ஸ்டாலின் அங்கிள்'' என்று தமிழக முதல்வரை குறிப்பிட்டார். நீண்ட காலம் அரசியலில் இருக்கும் ஸ்டாலினை விஜய் 'அங்கிள்' என மரியாதைக்குறைவாக பேசியதாக திமுகவினர் விஜய் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளனர். இது மட்டுமின்றி பிரதமர் மோடியை மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என பேசியதாக பாஜகவினரும், ஊழல் கட்சி என குறிப்பிட்டதால் அதிமுகவினரும் விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
