தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. மாநிலம் முழுவதும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் கடநத ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி குறைவாக உள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் விருதுநகர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடைசி இடமாக வேலூர் அறியப்பட்டுள்ளது.

ஆனால் தலைநகரமான சென்னையும், அதன் அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் மாணவர்களின் தேர்ச்சி குறைவாகவே வந்துள்ளது. மாவட்ட வாரியான பட்டியலில் சென்னை 32வது இடத்திலும், காஞ்சிபுரம் 30வது இடத்திலும், திருவள்ளுர் 29ம் இடத்திலும் உள்ளது.

இதில், மேற்கண்ட 3 மாவட்டங்களில் ஒரு மாணவர் கூட 100 சதவீதம் தேர்ச்சி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.