Vanathi Srinivasan : 4 ஆண்டுகளில் 5,338 பெண்கள் மாயம்... TheKeralaStory கதையை எதிரொலிக்கிறது- வானதி சீனிவாசன்
கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் 5338 பெண்கள் மாயமாகியிருப்பதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகியுள்ளது. இது TheKeralaStoryயை எதிரொலிக்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கேரளாவில் பெண் மாயம்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிரிஷ் பரத்வாஜ்கேரளாவில் காணமல் போன சிறுமிகள் மற்றும் பெண்கள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளார். இதற்கு கேரள மாநில குற்றப்பிரிவு தகவல் சேகரிப்பு பிரிவின் சார்பில் பதில் கடந்த 12 ஆம் தேதி பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2-23ஆம் ஆண்டு டிசம்பர் வரை பெண்கள் காணமல் போனது தொடர்பாக 5338 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா ஸ்டோரி கதையை நினைவூட்டுகிறது
இந்த பதிலை வெளியிட்டு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், கடந்த 4 ஆண்டுகளில் #கேரளாவில் 5338 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர், இது #TheKeralaStory இல் உள்ள கவலையளிக்கும் கதையை எதிரொலிக்கிறது. ஆயினும்கூட, இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், அதற்கு பதில் அளிக்காமல் ஒதுக்கி தள்ளுகிறார் என கூறியுள்ளார்.
பெண்களை பாதுகாப்போம்
தேர்தல் பிரச்சாரத்தை விட தற்போது நம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார். காணாமல் போகும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு குடும்பத்தையும், துயரத்தில் இருக்கும் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார். எனவே நம்முடைய பெண்களை பாதுகாப்போம், அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.