கனமழை காரணமாக 2 நாட்களுக்கு பள்ளி விடுமுறை.. ஆட்சியர் உத்தரவு - எங்கு தெரியுமா?
தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்தியாவில் தற்போது வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதே போல கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே இறுதியிலேயே தொடங்கி விட்டது.
மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி
இதனால் தொடர்ந்து பெய்த கனமழையால், இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரவு பகலாக பெய்து வரும் மழையால் கேரளாவில் அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.கேரளாவை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி. பகுதிகளில் மழை விடாமல் பொழிந்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !
இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை