"லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி
ஜூலை 11 அதிமுக பொதுக்குழு நடக்குமா ? நடக்காதா ? என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
ஒற்றை தலைமை விவகாரம்
தமிழக அரசியலில் சில வாரங்களாக ட்ரெண்டிங் ஆக இருக்கிறது அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்.ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலம் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டதும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி கூட்டப்படும் என்ற அறிவிப்பும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை தண்டிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இபிஎஸ் Vs ஓபிஎஸ்
இந்த வழக்கு நேற்று இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக விசாரிக்க முடியாது என்றும், இதுதொடர்பாக தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்தது.அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார் .
அதிமுக பொதுக்குழு
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆஜராகி முறையீடு செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கை நாளை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.ஜூலை 11 அதிமுக பொதுக்குழு நடக்குமா ? நடக்காதா ? என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்
லேடியா, மோடியா ?
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திராவிட கழக தலைவர் கி.வீரமணி,’அதிமுகவை பொறுத்தவரையில், பாஜக ஆட்டுகின்ற பொம்மலாட்டத்திற்குள் சிக்கியுள்ளதால், இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பொன்விழாவை அவர்கள் கொண்டாட வேண்டிய காலகட்டத்தில் புண்விழாவாக அதை மாற்றி கொண்டு, பல குழுக்களாக பிரிந்துள்ளனர். பாஜகவுடன் அவர்கள் சேர்ந்ததன் விளைவு தான்.
அவர்கள் (அதிமுக) அடமானமாக இல்லாமல், சுதந்திரமாக இருக்க வேண்டும். பழைய காலத்தை நினைத்து பார்த்தால், நிச்சயமாக இது லேடி வழியில் போகவில்லை. மோடி வழியில் தான் போகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறினார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா மோடியா ? இல்லை தமிழ்நாட்டு லேடியா ? என்று பிரச்சாரத்தின் போது இவ்வாறு கூறினார். அப்போதைய வெற்றிக்கு இந்த பிரச்சாரமும் முக்கியமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு.. கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு