சென்னைக்கு திடீரென வந்த அமெரிக்க கடற்படை கப்பல்..! கடற்படை தளம் அமைக்க திட்டமா.?- வெளியான பரபரப்பு தகவல்

சென்னைக்கு அமெரிக்க கடற்படை கப்பல் வந்த நிலையில், இந்தியாவில் கடற்படை தளம் அமைக்கும் திட்டம் இல்லை என அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலக தலைவர் கேப்டன் மைக்கேல் பார்மர் ( Michael Farmer )தெரிவித்துள்ளார். 

USNS Salver has arrived in Chennai for repairs

சென்னைக்கு வந்த அமெரிக்க கப்பல்

அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த USNS Salvorஎன்ற கப்பல் 251 அடி நீளமும், 51 அடி அகலமும், 3336 டன் எடை கொண்டதாகும், கடலில் மீட்பு, இழுத்து செல்லுதல், கடலோர தீயணைப்பு, கனரகப் பொருட்களை தூக்குதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிகளை சால்வர் மேற்கொண்டு வருகிறது. யுஎஸ்என்எஸ் சால்வோரின் கட்டுமானம், அதன் வேகம் மற்றும் உறுதித்தன்மை, உலகம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. மேலும் அமெரிக்க கடற்படையின் காம்பாட் லாஜிஸ்டிக்ஸ் ஆதரவுப் படையின் ஒரு அங்கமாக இது செயல்பட்டு, கடலில் உள்ள கடற்படைக்கு மீட்பு சேவைகளை வழங்குகிறது.

USNS Salver has arrived in Chennai for repairs

அமெரிக்க கப்பலுக்கு சென்னையில் பழுது பார்க்க ஒப்பந்தம்

இதனிடையே இந்த கப்பலில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யும் வகையில் சென்னை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்துள்ளது. எல் அண்ட் டி நிறுவனத்திற்கும்  - அமெரிக்க கடற்படைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்  அடிப்படையில், அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த USNS Salvor என்ற கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு மேற்கொள்வதற்காக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்க-இந்திய இடையே கடற்படை பழுது மற்றும் பராமரிப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் கப்பல் பழுதுபார்க்கும் சிறப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை ( L & T) லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துடன் வுடன் கடந்த ஜூன் 26 ஆம் தேதி கையெழுத்திட்டது. ஐந்து ஆண்டு காலத்துக்கு போடப்பட்ட ஒப்பந்தந்தின் அடிப்படையில் பழுது பார்க்க வருகை தந்துள்ள முதல் கப்பல் சால்வர் கப்பலாகும். 

USNS Salver has arrived in Chennai for repairs

5 ஆண்டுக்கு ஒப்பந்தம்

ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டில் சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள L&T கப்பல் கட்டும் கட்டும் தளத்தில் உள்ள பழுது பார்க்கும் தளத்தில் ( Charles drew)  சார்லஸ் ட்ரூ, மேத்யூ பெரி ( mathew berry) ஆகிய அமெரிக்கா கப்பல்களுக்கு பழுது பார்க்கப்பட்டுள்ளது. சால்வர் கப்பல் வருகை குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலக தலைவர் கேப்டன் மைக்கேல் பார்மர் ( Michael Farmer ) , எல் அண்ட் டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள கடந்த ஓர் ஆண்டு காலமாக பேச்சுவார்த்தை நடைப்பெற்று வந்ததாகவும்,  கடந்த மாதம் கப்பல்களை சரி செய்வதற்கான ஐந்து ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறினார். இந்தியாவிலேயே மிகவும் நவீனமான கப்பல் கட்டும் தளம எல் அண்ட் டி நிறுவனம் தான் எனவும் அதனால் தான் அந்த நிறுவனத்தை தேர்வு செய்ததாக கூறினார்.

USNS Salver has arrived in Chennai for repairs

கடற்படை தளம் அமைக்க திட்டமா.?

இந்த ஒப்பந்தம் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள், சரக்கு கப்பல்கள் போன்றவை பழுதுபார்க்கப்படவுள்ளதாகவும், போர் கப்பல்கள் பழுது பார்க்கும் திட்டம் ஏதும் இல்லை என கூறினார்.  மேலும் இந்தியாவில் கடற்படை தளம் அமைக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, அப்படி ஒரு திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்தார்.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்கா இடையே இந்திய பசுபிக் பகுதியில் நீடித்த, வளமான, அமைதியான சூழல் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

வட மாநிலங்களைப் புரட்டிப் போடும் வெள்ளப் பெருக்கு: தத்தளிக்கும் இமாச்சல், டெல்லி மக்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios