வட மாநிலங்களைப் புரட்டிப் போடும் வெள்ளப் பெருக்கு: தத்தளிக்கும் இமாச்சல், டெல்லி மக்கள்!
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வட இந்தியாவின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கடந்த மூன்று நாட்களில் குறைந்தது 19 பேர் பலியாகியுள்ளனர். பல சாலைகள் மற்றும் கட்டிடங்கள் முழங்கால் அளவு நீரில் மூழ்கியுள்ளன. இச்சூழலில் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத மழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உட்பட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மணாலி, குலு, கின்னவுர் மற்றும் சம்பா ஆகிய இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சில கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
அதிகரித்து வரும் பணக்காரக் குடும்பங்கள்... தமிழ்நாட்டுக்கு 2வது இடம்! ஆய்வில் தகவல்
இமாச்சல் அருகே உள்ள உத்தரகாண்ட் மாநிலமும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக குர்கான் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களை இன்று வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன.
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்: வன்முறை நிகழ்ந்த 697 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு
ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடி நீரை திறந்துவிட்டதை அடுத்து, யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை கண்காணிக்க டெல்லி அரசு 16 கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது. மழை மற்றும் வெள்ளம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 40 ஆண்டுகளுக்கும் மிக அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரே நாளில் 153 மி.மீ மழை பெய்தது. அதற்குப்பின் நேற்றுதான் அந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூன்று நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொட ங்கியுள்ளது. பஞ்சதர்னி மற்றும் ஷேஷ்நாக் முகாம்களில் இருந்து தங்கியவர்கள் மீண்டும் யா த்திரையைத் தொ டர்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் பற்றி சர்ச்சை கருத்து... திக்விஜய் சிங் மீது வழக்குப்பதிவு
ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மோசமான பாதிப்புக்குள்ளான இடங்களில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
ம.பி.யில் இளைஞரை காரில் கடத்தி சரமாரியாகத் தாக்கி உள்ளங்காலை நக்க வைத்த கொடுமை!