ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் பற்றி சர்ச்சை கருத்து... திக்விஜய் சிங் மீது வழக்குப்பதிவு

காங்கிரஸ் தலைவர்கள் தவறான தகவல்களை பரப்பி சமூக வெறுப்பை ஏற்படுத்துவதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.

Case Against Congress's Digvijaya Singh For Tweet On RSS Ideologue

ஆர்எஸ்எஸ் எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய பதிவைப் பகிர்ந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் மீது இந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திக்விஜய் சிங் பதிவு குறித்து கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர்கள் தவறான தகவல்களை பரப்புவதாகவும், தவறான பதிவைப் பகிர்வதன் மூலம் சமூகத்தில் வெறுப்பைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் தனது வாழ்நாள் முழுவதும் சமூக வேறுபாடுகளை அகற்றி, இணக்கமான சமுதாயத்தை கட்டியெழுப்ப உழைத்ததாகவும் சௌஹான் கூறியுள்ளார்.

ஒரு புத்தகத்தின் அடிப்படையில் உண்மையைத்தான் திக்விஜய் சிங் தனது பதிவில் பகிர்ந்தார் என்றும் பாஜக தங்கள் கட்சியின் குரலை அடக்க முடியாது என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். 1940-73 வரை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக இருந்தார்.

வந்தே பாரத் ரயிலுக்கு காவியா? தேசியக் கொடியில் உள்ள நிறம் என்று ரயில்வே அமைச்சர் விளக்கம்

Case Against Congress's Digvijaya Singh For Tweet On RSS Ideologue

திக்விஜய சிங் நேற்று ட்விட்டரில் எழுதிய பதிவில் குருஜி என்று அழைக்கப்படும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்ட ஒரு பக்கத்தின் படத்தை ட்வீட் செய்தார். மூத்த ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர் சுனில் அம்பேகர்,  திக்விஜய் சிங்கின் பதிவு போட்டோஷாப் செய்யப்பட்டு என்று குறை கூறியு்ள்ளார்.

இது அடிப்படையற்றது; சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்றும், குருஜி இதுபோன்ற கருத்துக்களை ஒருபோதும் கூறவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக நிராகரித்தார். சமூக பாகுபாடுகளை அகற்றுவதிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது எனவும் குறிப்பிட்டார்.

ஊருக்குள்ளே வரக்கூடாது... உ.பி.யில் தலித் இளைஞரைத் தாக்கி செருப்பை நக்க வைத்த அவலம்!

Case Against Congress's Digvijaya Singh For Tweet On RSS Ideologue

வழக்கறிஞரும் ஆர்எஸ்எஸ் ஊழியருமான ராஜேஷ் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில், திக்விஜய சிங்குக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153-A, 469, 500 மற்றும் 505  ஆகியவற்றின் கீழ் சனிக்கிழமை இரவு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என துகோகஞ்ச் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"கோல்வால்கரின் சில கருத்துக்களைப் பதிவில் திக்விஜய் சிங் கூறியதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என இந்தூர் காவல் ஆணையர் மகரந்த் தெரிவித்துள்ளார். திக்விஜய் சிங் மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்குப் பிறகு அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களிடையே மோதலை உருவாக்கி மக்களைத் தூண்டிவிடுவதற்காக, குருஜியின் பெயர் மற்றும் படத்தைக் கொண்ட சர்ச்சைக்குரிய போஸ்டரை திக்விஜய் சிங் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் என்று ராஜேஷ் ஜோஷி தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏசியாநெட் எடிட்டர் குறித்து ஆபாசப் பதிவு போட்ட முன்னாள் நீதிபதிக்கு ஊடகவியலாளர்கள், நெட்டிசன்கள் கண்டனம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios