வந்தே பாரத் ரயிலுக்கு காவியா? தேசியக் கொடியில் உள்ள நிறம் என்று ரயில்வே அமைச்சர் விளக்கம்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 28வது வந்தே பாரத் ரயிலின் புதிய காவி நிறம் இந்திய மூவர்ணக் கொடியில் உள்ளது என்று கூறினார்.
இந்தியாவினால் உருவாக்கப்பட்ட 28வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காவி நிறத்தில் இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
சனிக்கிழமை சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அவர், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஊருக்குள்ளே வரக்கூடாது... உ.பி.யில் தலித் இளைஞரைத் தாக்கி செருப்பை நக்க வைத்த அவலம்!
மொத்தம் 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நியமிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இரண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்து தயாராகியுள்ள 28வது ரயில் சோதனை முறையில் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, சனிக்கிழமை சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஆய்வு நடத்திய பிறகு பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 28வது வந்தே பாரத் ரயிலின் புதிய காவி நிறம் இந்திய மூவர்ணக் கொடியில் உள்ளது என்று கூறினார். வந்தே பாரத் ரயில்களில் 25 புதிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய ஏவுகணைகள் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்குக் கசியவிட்ட டிஓர்டிஓ அதிகாரி!
"வந்தே பாரத் ரயில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது. உள்நாட்டு பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலில் ஏசிகள், கழிப்பறைகள் போன்றவற்றைப் பற்றி பெற்ற கருத்துக்கள் அடிப்படையில் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன" என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
காவி வந்தே பாரத் ரயிலில் ஆன்டி க்ளைமர்ஸ் அல்லது ஆண்டி-கிளைம்பிங் என்ப்படும் புதிய பாதுகாப்பு அம்சம் இடம்பெற்றுள்ளது. இவை இனி அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் பிற ரயில்களிலும் இடம்பெறும் என்று அமைச்சர் அஸ்வினி கூறினார்.
அமலாக்கத்துறைக்கு சூப்பர் பவர்! ஜிஎஸ்டி முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை