ம.பி.யில் இளைஞரை காரில் கடத்தி சரமாரியாகத் தாக்கி உள்ளங்காலை நக்க வைத்த கொடுமை!
கடந்த மே மாதம் கான் மற்றும் கோலு குர்ஜார் இடையே நடந்த சண்டையின் விளைவாக ஜூன் 23ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் சொல்கின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓடும் காரில் ஒருவர் மற்றொருவரை வெறித்தனமாகத் தாக்கி தனது உள்ளங்கால்களை நக்க வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான வீடியோவில் பாதிக்கப்பட்டவரை இன்னொருவர் பலமுறை அறைவதைக் காணமுடிகிறது. பாதிக்கப்பட்டவர் அடி உதை தாங்க முடியாமல் தாக்கிய நபரின் உள்ளங்கால்களை நக்குகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் பலமுறை அடிப்பதையும், தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். மற்றொரு வீடியோவில், காரின் பின்புறம் அமர்ந்திருக்கும் மற்றொருவர் குற்றம் சாட்டப்பட்டவர் கையில் ஒரு செருப்பைக் கொடுக்க, அவர் அதை வாங்கி, பாதிக்கப்பட்டவரின் முகத்தில் ஓங்கி ஓங்கி அடிக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரை காரில் கடத்தி கொடுமைப்படுத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மேலும் இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர் என்று குவாலியர் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சந்தேல் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ரயிலுக்கு காவியா? தேசியக் கொடியில் உள்ள நிறம் என்று ரயில்வே அமைச்சர் விளக்கம்
"இந்த வீடியோ குவாலியர் காவல்துறையின் கவனத்திற்கு வந்ததும், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் நான்கு இளைஞர்கள் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது... குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில், முக்கிய குற்றவாளி உட்பட இருவரைக் கைது செய்துள்ளோம்” என அவர் கூறினார்.
குவாலியர் மாவட்டத்தில் உள்ள தப்ரா நகரில் வசிப்பவர் மொஹ்சின் கான். குற்றம் சாட்டப்பட்டுள்ள கோலு குர்ஜார், சுதீப் குர்ஜார், தேஜேந்திர குர்ஜார் மற்றும் அமித் குர்ஜார் ஆகியோரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கடந்த மே மாதம் கான் மற்றும் கோலு குர்ஜார் இடையே நடந்த சண்டையின் விளைவாக ஜூன் 23ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் சொல்கின்றனர்.
மே 21, 2023 அன்று பாதிக்கப்பட்டவர் தனது கூட்டாளிகளுடன் தப்ரா பகுதியில் வைத்து குற்றம் சாட்டப்பட்ட நபரை தாக்கினார் என்றும் அந்த வீடியோவும் அப்போது வைரலானதை அடுத்து, அது குறித்தும் வழக்புப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருப்பதாவும் போலீசார் கூறுகின்றனர்.
கடந்த ஜூலை 6ஆம் தேதி மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாஜக பிரமுகரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலைக் கழுவி மன்னிப்பு கோரியுள்ளார். பாதிக்கப்பட்ட தஷ்ரத் ராவத்தை போபாலில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு நேரில் வரவழைத்து, அவரது கால்களைக் கழுவி, மன்னிப்பு கோரினார். அதேபோல முதல்வர் சவுகான் குவாலியர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரின் பாதங்களையும் கழுவி மன்னிப்பு கேட்பாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
From The India Gate: கட்டிப்பிடித்த ஹெக்டே முதல் சீட் பிடிக்க துடிக்கும் செங்கன்னா வரை