ஓட்டு போட்ட மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஆ.ராசா; 2ஜி வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு - எல்.முருகன்
நல்லது செய்யவேண்டும் என்பதற்காக ஓட்டுபோட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியவர் ஆ.ராசா என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று நீலகிரி தொகுதியான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்தார். மேட்டுப்பாளையம் வந்த அவருக்கு முன்னதாக அன்னூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை பா. ஜ. க நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சர் வாகனத்திற்கு இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வந்து வரவேற்பு அளித்தனர்.
போதைப் பொருளை கடத்துவதற்காகவே அயலக அணி என்ற ஒரு அணியை உருவாக்கிய கட்சி திமுக - பாஜக குற்றச்சாட்டு
இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் காரமடை சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீலகிரி தொகுதியின் எம்பி ஆ. ராசா 2ஜி விவகாரத்தில் முறைகேடு செய்து நீலகிரி தொகுதி மக்களுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் இந்து மதத்தினையும், இந்து கடவுள்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் ஆ.ராசாவை நீலகிரி தொகுதி மக்கள் தேர்தலில் புறக்கணிக்க காத்திருக்கின்றனர். மேலும் தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2ஜி வழக்கின் மேல் முறையீட்டு வழக்கு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று, நாளை, அல்லது இன்னும் ஒரு வாரத்தில் 2ஜி விவகாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற செய்ய தொண்டர்கள் ஒருங்கிணைந்து களப்பணி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.