போதைப் பொருளை கடத்துவதற்காகவே அயலக அணி என்ற ஒரு அணியை உருவாக்கிய கட்சி திமுக - பாஜக குற்றச்சாட்டு
போதைப் பொருளை கடத்துவதற்காகவே திமுக அயலக அணியை உருவாக்கி அதன் மூலம் போதை பொருட்களை கடத்தி வந்ததாக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே, பாஜக சார்பில், வளர்ச்சியடைந்த பாரதம், மோடியின் உத்திரவாதம் என்ற தலைப்பில் மோடி அரசின் பொதுமக்களின் கருத்து கேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக பாஜக., மாநில துணைத்தலைவர் கே.பி.இராமலிங்கம் முதல் மனுவை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போதைப்பொருளை கடத்தியதாக ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக்கிற்கும், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு என்ன தொடர்பு என்பதை விசாரிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி பல ஆண்டு காலம் கட்சியை நடத்தியபோது திமுகவில் அயலக அணி என்ற அணி கிடையாது. அப்படி இருக்கும் போது தற்போது அயலக அணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? திமுக இந்தியாவை தாண்டி வெளி நாட்டில் போட்டியிடப் போகிறதா?
போதைப் பொருளை கடத்துவதற்காகவே அயலக அணி என்ற ஒரு அணியை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்து திமுக தேர்தலை சந்திக்கிறது. திமுக என்பது மாநில சுயாட்சியையும், மாநில கொள்கையையும் பேசும் ஒரு கட்சி. அப்படிப்பட்ட மாநில கட்சிக்கு அயலக அணி எதற்கு?
வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம் என்பதே மோடியின் உத்தரவாதம், அதற்கு மக்களின் ஆலோசனைகளை கேட்டு பெறுகிறோம். தமிழகத்தில் இருந்து 1 கோடி மனுக்களை பெற்று அனுப்புவதே எங்கள் இலக்கு. இந்த முறை மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. அதில் தமிழகத்தின் பங்கும் நிச்சயம் இருக்கும். இந்த முறை தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதை யாரும் மாற்ற முடியாது.
பெண்கள் சமையல் அறையிலேயே முடங்கி கிடக்க வேண்டும் என்பதற்காக சிலிண்டர் விலை குறைப்பு? கனிமொழி கேள்வி
திமுகவில் இருந்து ஏன் வெளியேறினீர்கள் என பலரும் என்னிடம் கேள்வி கேட்டனர். கட்சியில் போதைப் பொருளை விற்று அதன் மூலம் தேர்தலை சந்திக்கும் திட்டம் உள்ளதாக அப்போதே எனக்கு அரசல் புரசலாக தகவல் வந்தது. அதனால் தான் கட்சியில் இருந்து விலகினேன் என்றார்.