2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு ரூ.7,564 கோடியும் கேரளாவுக்கு ரூ.3,042 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் ரயில் என்ற வார்த்தையே வரவில்லை என பலரும் விமர்சித்துள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்கட்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்காக 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
கர்நாடக மாநிலத்திற்கு ரூ.7,564 கோடியும் கேரளா மாநிலத்திற்கு ரூ. 3,042 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கர்நாடகாவில் 97% ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
2025 உலகின் டாப் 10 சக்திவாய்ந்த நாடுகள் பட்டியல்! இந்தியாவுக்கு எந்த இடம்?
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.2,948 கோடி செலவில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன எனவும் ரூ.33,467 கோடி செலவில் 2,587 கி.மீ தொலைவிற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்ற அஸ்வினி, நாடு முழுவதும் 50 புதிய நமோ பாரத் ரயில்களை இயக்க மத்திய பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வேயில் இயக்கபபடும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்.
பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் பாலம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றஉம் உறுதி அளித்தார். ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் தேவை என்று வலியுறுத்திய அமைச்சர், தனுஷ்கோடி ரயில்வே திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த விருப்பப்படவில்லை என குறைகூறினார்.
முகேஷ் அம்பானி குடும்பத்தின் கல்வித் தொகுதி என்ன? நிறைய படிச்சது யார் தெரியுமா?
