10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை விஜய் பாராட்டி பரிசு வழங்கிய நிகழ்வைத் தொடர்ந்து, வேல்முருகன் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார். 

பள்ளி மாணவர்களுக்கு விஜய் பாராட்டி பரிசு

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் அரசு பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் அதிகமாக எடுத்த மாணவர்களை தவெக கட்சியின் தலைவர் விஜய் நேரில் அழைத்து அவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். அப்போது ஒரு சிலர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும் சிலர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினர்.

வேல்முருகன் சர்ச்சை பேச்சு

இதற்கிடையே தவெக கட்சியின் சார்பாக நடத்திய நிகழ்ச்சிகள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் பற்றியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு தவெக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

வேல்முருகனை கண்டித்து போஸ்டர்

இதனையடுத்து விஜயை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஓட்டப்பட்டது. அதில் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களே அடக்கி வாசியுங்கள் இல்லையெனில் அடக்கப்படுவீர்கள் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தவெக கட்சியின் மேற்கு மாவட்டத்தின் சார்பாக வாலாஜா முத்துக்கடை நவல்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "மன்னிப்பு கேள்" "மன்னிப்பு கேள்" எங்கள் உயிரினும் மேலான அண்ணன் வெற்றிக் தலைவரையும் சாதனை படைத்த மாணவிகளையும் பெற்றெடுத்த பெற்றோர்களும் இழிவாக பேசிய திமுகவில் தொங்கு சதையான வேல்முருகனை வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்திருந்தனர்.

போஸ்டர் வைரல்

மேலும் வேல்முருகன் ஓடுவது போன்றும் மாணவர்கள் பின்னால் துரத்திச் சென்றவாறு காலணிகளை எரிந்தவாறும், மற்றொன்றில் மாணவர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் உள்ள புகைப்படம் ஆகிய இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.