தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விஜய்யின் த.வெ.க., வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை கோவையில் நடத்துகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026 எதிர்கொள்ள பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. தனது அரசியல் எதிரி திமுக தான் என விஜய் தெள்ளத்தெளிவாக அறிவித்து விட்டார். இதனால் முன் எப்போது இல்லாத வகையில் தமிழக அரசியலில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு

இந்நிலையில் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்த உள்ளார். அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இன்று ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தி, சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இரண்டு நாட்கள் கருத்தரங்கு

நாளை கரூர் மேற்கு, கரூர் கிழக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை கிழக்கு, கோவை புறநகர் கிழக்கு, கோவை புறநகர் வடக்கு, திருப்பூர் மேற்கு, திருப்பூர் தெற்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் மாநகர், நீலகிரி கிழக்கு, நீலகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாவட்ட நிர்வாகிகளுக்கான கருத்தரங்கு கூட்டம் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. 

ஸ்தம்பித்த கோவை

கருத்தரங்கில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவரும். நடிகருமான விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது தொண்டர்களை நோக்கி விஜய் கையசைத்தார். விஜய்யை வரவேற்பதற்காக ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் குவிந்தததால் கோவை விமானம் நிலையே ஸ்தம்பித்தது. மேலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் பெண்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.