பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாடு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக 506 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்தும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இந்த மாநாட்டில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டிற்கு தொண்டர்கள் நேற்று இரவு முதலே தொண்டர்கள் சாரை சாரையாக குவிய தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் மாநாட்டு மேடைக்கு முன்பாக ஆரவாரத்துடன் இடம் பிடித்துள்ளனர். விஜய் மாநாட்டிற்காக அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

300 மீட்டர் தொலைவு ரேம்ப் வாக்

மாநாட்டு மேடையின் முகப்பில் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் விஜய் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேடையில் இருந்து 300 மீட்டர் தொலைவு ரேம்ப் வாக் நடந்து தொண்டர்களை விஜய் சந்திக்க நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டில் நடந்த சிறிய தவறுகள் போல எதுவும் நடந்த விடக்கூடாது என்பதால் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூடவே இருந்து ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் ஆனந்த்

இதனிடையே, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாடு நடைபெறும் இடத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொண்டர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய கட்சியின் பொதுச்செயலாளரே இப்படி செய்தால் எப்படி என நெட்டிசனங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மாம்பலம் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூர்ந்து கவனிக்கும் தேசிய கட்சிகள்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு தமிழகம் மட்டுமின்றி தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுடன் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த மாநாட்டிற்கு பிறகு தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களும் பரபரப்புகளும் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது திமுக, அதிமுகவில் இருந்து சில கட்சிகள் வெளியேறி தவெக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.