TTF வாசன் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணம்.. முடிந்தால் என்னோடு ரேஸுக்கு வரச்சொல்லுங்கள் - சவால் விட்ட அலிஷா!
Challenge for TTF Vasan : பிரபல யூடியூபர் ttf வாசன் அடுத்த 10 ஆண்டுகள் வாகனங்களை இயக்காத அளவிற்கு அவருடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாஜக நிர்வாகியும், கார் மற்றும் பைக் ரேசருமண அலிஷா அப்துல்லா ஒரு பகிரங்க சவாலை வெளியிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு பிரபல யூட்யூப் பிரபலம் டிடிஎப் வாசன் பைக்கில் சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் வீலிங் செய்த பொழுதுதான் இவ்வாறு நடந்தது என்று கூறி, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறை தண்டனையும் அனுபவிக்க நேர்ந்தது.
அவர் தற்பொழுது தனது சிறை தண்டனையை முடித்து வெளியே வந்துள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் வாகனம் ஓட்டாத வகையில் அவருடைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக கட்சியின் நிர்வாகியும் கார் மற்றும் பைக் ரேஸ்ருமான அலிஷா அப்துல்லா ஒரு பிரபல நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அந்த விபத்து பற்றி கேள்விப்பட்ட பொழுதுதான் டிடிஎப் வாசன் பற்றி எனக்கு தெரியும் அதற்கு பிறகு தான் அவருடைய வீடியோக்கள் பலவற்றை நான் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
"டிடிஎஃப் வாசன் இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்து வருகிறார், அது மட்டும் அல்லாமல் அவர் விபத்து நடந்த பொழுது ஓட்டிச் சென்ற வண்டி சுமார் 1200 சிசி கொண்ட வண்டி, இது உலகத்திலேயே மிகவும் எடை கூடுதலான இருசக்கர வாகனம். இதை வைத்துக் கொண்டு வீலிங் செய்யவே முடியாது. அவர் எவ்வளவு பெரிய ப்ரொபஷனல் ரேசராக இருந்தாலும் அந்த வண்டியின் எடை காரணமாக யாராலும் அந்த வாகனத்தில் வீலிங் செய்ய முடியாது."
"ஆகவே டிடிஎஃப் வாசன் தான் செய்து வரும் தவறுகளை உணர வேண்டும், அவருக்கு 10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது சரியே. நான் ப்ரொபஷனலாக பைக் ஓட்ட கற்றுக் கொண்டவள், எனக்கு நிறைய அடிபட்டிருக்கிறது. ஆனால் டிடிஎஃப் வாசன் அப்படி அல்ல, தயவு செய்து இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் சப்போர்ட் செய்யாதீர்கள். இவர்கள் இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணமாக இருக்கின்றார்கள்".
"அதுபோல டிடிஎஃப் வாசன் ரேசர் கிடையாது அவர் ஒரு பயிற்சி பெறாத ஸ்டண்ட் டிரைவர் அவ்வளவுதான், ஸ்டண்ட் செய்வதற்கென்று தனி இடம் இருக்கிறது, சாலையில் எல்லாம் செய்யக்கூடாது. அது மட்டுமல்லாமல் முழுமையாக பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே இது போன்ற ஸ்டண்ட்களில் ஈடுபட வேண்டும். சென்னை ரேஸ் கிளப்பில் வந்து ஓட்டச் சொல்லுங்கள், பாதி அளவு கூட அவரால் போக முடியாது.
தூய்மை பணியாளர்களின் கல்களை கழுவி பாத பூஜை செய் நீதிபதிகள் - உளுந்தூர் பேட்டை
"10 ஆண்டுகள் மட்டும் அல்ல அவருக்கு வாழ்நாள் முழுவதும் இருசக்கர வாகன லைசென்ஸ் செய் ரத்து செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் அவர் தன்னிடம் உள்ள சர்வதேச வாகன ஓட்டும் உரிமையை வைத்து வாகனம் ஓட்டினால், நிச்சயம் நானே கேஸ் போடுவேன். வாசன் பைக் ரேசர் என சொல்லி உண்மையான ரேசர்களை அவமான ப்படுத்தாதீர்கள். வாசன் எந்த பைக்கை வேண்டுமானாலும் ட்ராக்கிற்கு எடுத்து வரட்டும், என்னுடன் ரேசுக்கு வரட்டும். நான் சவால் விடுகிறேன், நிச்சயம் அவரால் ஓட்ட முடியாது. அவரால் பைக்கை வைத்துக்கொண்டு சீந்தான் போட முடியும்" என்று அவர் மிகக் காட்டமாக பேசியுள்ளார்.