கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லையா.? போராட்டத்திற்கு காரணம் என்ன.? போக்குவரத்து கழகம் விளக்கம்

வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளை விட நேற்றைய தினம் அதிக அளவில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், 10ஆம் தேதி மட்டும் ஒரு லட்சத்து 7ஆயிரத்து 632 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Transport Corporation explanation regarding passenger protest at Kilambakkam bus stand KAK

கிளாம்பாக்கத்தில் பயணிகள் போராட்டம்

சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கத்தில் இருந்து உரிய பேருந்துகள் இயக்கப்படவில்லையென பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தகவலில்,  10.02.2024 அன்று நள்ளிரவு 01.00 அளவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை திடீரென அதிகரித்த காரணத்தினால் , பயணிகளின் தேவையை பூர்த்தி செய்திட  கூடுதல் பேருந்துகள் பிற இடங்களிலிருந்து வரவழைக்க தேவைப்பட்ட கால அவகாசத்திற்கிடையே வந்தவாசி  ,போளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறி பயணிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையில் திரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Transport Corporation explanation regarding passenger protest at Kilambakkam bus stand KAK

திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

இந்தநிலையில் 10.02.2024 அன்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் சார்பாக 350 பேருந்துகளும்,  அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் சார்பாக 201 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், சேலம் சார்பாக 15 பேருந்துகளும், மேலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக திருவண்ணாமலைக்கு 23 பேருந்துகள் இயக்கப்பட்டன ஆக மொத்தம் தினசரி இயக்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன், 612( திருவண்ணாமலைக்கு 150 பேருந்துகள்) சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளை விட நேற்றைய தினம் அதிக அளவில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Transport Corporation explanation regarding passenger protest at Kilambakkam bus stand KAK

ஒரு லட்சத்து 7ஆயிரம் பேர் பயணம்

மேற்படி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட காரணத்தினால் வழக்கம் போல (வார இறுதி நாட்களில்) அதி காலை 3.30  மணியளவில் பயணிகள் அனைவர்களும் முழுமையாக அவர்தம் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.மேலும்  இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக, நேற்றைய தினம் (10.02.2024) மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அரசு போக்குவரத்து கழக அலுவலர்களும், காவல்துறையினரும் அதிகாலை வரை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து இயக்கத்தினை சரி செய்தனர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

சென்னையில் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் பக்கம் போறீங்களா.? ரூட்டை மாற்றி போக்குவரத்து போலீஸ்- காரணம் என்ன.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios