Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் பக்கம் போறீங்களா.? ரூட்டை மாற்றி போக்குவரத்து போலீஸ்- காரணம் என்ன.?

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் , ஸ்டேர்லிங் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Traffic diversion in Nungambakkam and Anna High Level Bridge area for Metro Rail work KAK
Author
First Published Feb 11, 2024, 9:34 AM IST

சென்னையில் மெட்ரோ ரயில் பணி

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், புதிய வழித்தடமாக மயிலாப்பூர், திநகர், நுங்கம்பாக்கம் , கோடம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், CMRL பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டேர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மேட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமான பணிக்காக 1. அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், 2 நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் 3 ஸ்டேர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில்,

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக பிரமாண்ட பேரணி

Traffic diversion in Nungambakkam and Anna High Level Bridge area for Metro Rail work KAK

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

11.02.2024 முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமனி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிவழிப்பாதையாக  செயல்படுத்தப்படும்.  இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை). அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். 

Traffic diversion in Nungambakkam and Anna High Level Bridge area for Metro Rail work KAK

மாற்று வழி அறிவிப்பு

(எற்கனவே உள்ளபடி). வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம்.மற்றபிற உட்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து அனுமதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

சர்வதேச அளவிலான சமையல் போட்டிக்கான ஒலிம்பிக்.. 124 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios