Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக பிரமாண்ட பேரணி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி எம்.பி. சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் சுமார் 5 ஆயிரம் பேர் பேரணியாக சென்றனர்.

aiadmk did rally for statehood in puducherry vel
Author
First Published Feb 10, 2024, 7:27 PM IST

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், புதுச்சேரியை நிதி கமிஷன் சேர்க்க வேண்டும், மூடியுள்ள ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி புதுச்சேரி ஏ.எப்.டி திடலில் ஒன்று கூடிய அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் புறப்பட்ட பேரணியில், புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டமன்றம் முன்பு வந்தடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மடிக்கணினி வழங்கும் விழாவில் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டு அழுத எம்எல்ஏ

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசும்போது, புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் மக்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. ஒரு ஆயா வேலை போட வேண்டும் என்றால் கூட மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. முதலமைச்சர் தன் அதிகாரத்தைக் கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு மத்திய அரசை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலைமை தேவையா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசுகையில், மாநிலத்திற்கு நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டிய அதிகாரம் மாநில அரசுக்கு கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் திட்டங்களை செயல்படுத்த முடியும். ஆனால் புதுச்சேரியில் வருவாய் வருகிறது, வருமான வரி வருகிறது, ஆனால் இந்த நிதி ஆளும் அரசுக்கு போகாமல் மத்திய அரசு எடுத்துக் கொண்டு மாநில அரசுக்கு மத்திய அரசு பிச்சையாக போடுவதாக கடுமையாக சாடினார்.

மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி  ஆனந்த், 200 வாடிக்கையாளர்கள் அதிரடி கைது; 

பொது விநியோகத் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளது அரசின் அனைத்து திட்டங்களுக்கும் பணமாக கொடுக்கும் அரசு மாணவர்களுக்கு மடிக்கணணி வாங்க ஏன் பணமாக வழங்க கூடாது என்றார். மேலும், திமுக, காங்கிரஸ், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 43 ஆண்டுகாலம் ஆண்டார்களே ஏதாவது வளர்ச்சி அடைந்துள்ளதா? ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி என கூட்டாட்சி தத்துவத்தை மோடி அரசு கேலிக் கூத்தாக மாற்றி வருகிறது. மக்களை ஏமாற்றி உணர்வுகளை தூண்டி சாதி, மதத்தை சொல்லி வாக்குகளை பெற பாஜக முயற்சிக்கிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் வெற்றி கூட்டணி அமைக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார். அது விரைவில் அறிவிக்கப்படும். தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணிகள் குறித்தும் எடப்பாடி விரைவில் அறிவிப்பார். ஓபிஎஸ் என்பது ஒரு வெத்துவேட்டு அவருடைய சகாப்தம் முடிந்து விட்டது. பெருங்காய டப்பா சத்தம் போடுவது போல் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதை கேட்க இங்கு யாரும் தயாராக இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios