முழு கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பிக்க போகும் டெல்டா மாவட்டம்... அரசு பேருந்துகள் இயங்குமா?
தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையை ஏற்று காவிரியில் உரிய நேரத்தில் போதிய நீரை திறந்து விடாத காரணத்தால் பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி நாசமாகின. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையை ஏற்று காவிரியில் உரிய நேரத்தில் போதிய நீரை திறந்து விடாத காரணத்தால் பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி நாசமாகின. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையின்படி 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவை அறிவுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா அமைப்பினர் மற்றும் பாஜகவினர் தமிழக அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க;- முதல் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த மனைவி? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
இந்நிலையில், காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், இன்று தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி திமுக விவசாய அணி உட்பட அனைத்து விவசாய சங்கங்களும் இன்று நடைபெறும் போராட்டத்தில் குதிக்க உள்ளனர். இதனால் தஞ்சை மாவட்டத்தில் 10,000 கடைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 30000 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனிடையே டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் ஆட்டோ, பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.