Asianet News TamilAsianet News Tamil

கொடநாடு வழக்கு.! சாட்சியத்தை அழித்த குற்றவாளிக்கு சிறையில் நெஞ்சு வலி- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் அண்ணன் தனபாலுக்கு சேலம் சிறையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

To Dhanapal, the accused in the KodaNadu murder case  Had chest pains in Salem Jail KAK
Author
First Published Aug 21, 2024, 10:16 AM IST | Last Updated Aug 21, 2024, 10:16 AM IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் தலைமையிலான கும்பல்  கொள்ளை அடிக்க சென்றனர். அப்போது கொள்ளையர்களை தடுக்க முயன்ற காவலாளியை கொன்றுவிட்டு கொள்ளையடித்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.  இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து நிலையில் கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் விபத்தில் சிக்கி பலியானார்.

கொடநாடு கொலை வழக்கு.! குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை- சிபிசிஐடி ஷாக்

To Dhanapal, the accused in the KodaNadu murder case  Had chest pains in Salem Jail KAK

சாட்சியங்களை அழித்த கனகராஜ்

இந்த வழக்கு தொடர்பாக முதலில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தற்போது சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான கனகராஜ் பயன்படுத்திய  சிம் கார்டை எரித்து சாட்சியங்களை அழித்ததாக அவரது அண்ணன் தனபால் அவர் மீது குற்றச்சாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறிது நாட்களுக்கு பிறகு வெளியேவந்தவர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வந்தார். இதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், 

To Dhanapal, the accused in the KodaNadu murder case  Had chest pains in Salem Jail KAK

தனபாலுக்கு நெஞ்சு வலி

 கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாரமங்கலம் அருகே உதவி காவல் ஆய்வாளர் அழகுதுறையின் சட்டையை பிடித்து இழுத்து தள்ளியதாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  சேலம் மத்திய சிறையில் உள்ள தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலிக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . தனபாலுக்கு இருதய பகுதியில் பிரச்சனை உள்ளதால் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்த வந்த நிலையில் அதனை தனபால் மறுத்துள்ளார். இதனிடையே மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை, மணிமண்டபம்; அடிக்கல் நாட்டினார் சசிகலா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios