Asianet News TamilAsianet News Tamil

பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்.. எப்போது வரை நடைபெறுகிறது..? ஆன்லைனில் மேற்கொள்ளுவது எப்படி..? விவரம் இதோ

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. ஆன்லைனில் கலந்தாய்வு நடைமுறைகளை மேற்கொள்ளுவது குறித்து உயர்கல்வி துறை சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய கலந்தாய்வு நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 

TNEA Counselling 2022 for engineering courses starts today
Author
First Published Sep 10, 2022, 11:07 AM IST

அண்ணா பல்கலைக்கழக்த்தில் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேருவதற்கான இணையவழி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. உயர்கல்வித்துறை சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்துகிறது. 

தமிழகத்தில் மொத்தம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் 143 கல்லூரிகளில் 1.50 லட்சம் பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இதில் இந்த ஆண்டிற்கான கலந்தாய்வில் மொத்தம் 1.59 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு ஏற்கெனவே நிறைவு பெற்றுள்ளது.

மேலும் படிக்க:தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்.. எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா?

நீட் தேர்வு முடிவுகள் தாமதமானால் , கலந்தாய்வு தேதி மாற்றிமைக்கப்பட்டது. அதன்படி (இன்று) செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 10 முதல் 12 வரை முதல்கட்ட கலந்தாய்வும்,  செப்டம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேததி வரை 2ம் கலந்தாய்வும்,  அக்டோபர் 13 முதல் 15 வரை 3ம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 29 முதல் நவ.13 வரை 4ம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இன்று தமிழக அரசின்‌ 7.5% இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ 332 அரசுப்பள்ளி மாணவர்கள்‌ பங்கேற்கின்றனர்‌. ஒவ்வொரு சுற்றிலும்‌, மாணவர்களின்‌ தரவரிசைப்படி பங்கேற்க பட்டியல்‌ வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் நவம்பர் 15 முதல்‌ 20 வரை துணை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க:பொறியியல் இளநிலை கலந்தாய்வு புதிய தேதி அறிவிப்பு .. அமைச்சர் பொன்முடி தகவல்..!

இணையவழி கலந்தாய்வில்‌ மாணவர்கள்‌ தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள்‌, பாடப்பிரிவு தேர்வு செய்வதற்கும், தற்காலி ஒதுக்கீடு இறுதி செய்வதற்கும், கல்லூரிகளில்‌ சேருவதற்கு என 11 நாள்கள்‌ ஒதுக்கப்படுகின்றன. மாணவர்கள் ஆன்லைனில்‌ கலந்தாய்வு நடைமுறைகளை மேற்கொள்ளுவது குறித்து உயர்கல்வி துறை சார்பில் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios