தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்.. எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா?

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

New electricity tariff hike in Tamil Nadu effective from today

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின் கட்டணம் அமலில் இருந்த நிலையில், 2022 –2027 வரைக்கான திருத்த மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து ஜூலை 18ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கோவை, மதுரை, சென்னையிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றது. அப்போது, பங்கேற்ற  பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

New electricity tariff hike in Tamil Nadu effective from today

புதிய மின்கட்டண உயர்வு விவரம்

* புதிய மின் கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மின்சார வாரியத்துக்கு எழுதிக் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.

* இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்படும்.

* இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்படும்.

* இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்படும்.

* இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்தப்படும்.

* இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்த்தப்படும்.

* 800 யூனிட் வரை பயன்படுத்துவோர் மாதம் ஒன்றிற்கு 395 வீதம் 2 மாதங்களுக்கு ரூ. 790 செலுத்த வேண்டும்.

* 900 யூனிட் வரை மாதம் ஒன்றுக்கு ரூ. 565. செலுத்த வேண்டும் இரண்டு மாதம். இதுமட்டுமல்லாமல் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் ரூ.50 மின் கட்டணம் உயர்ந்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios