பொறியியல் இளநிலை கலந்தாய்வு புதிய தேதி அறிவிப்பு .. அமைச்சர் பொன்முடி தகவல்..!

பொறியியல் இளநிலை கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10ஆம் தேதி துவங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Engineering counseling from September 10! Minister Ponmudi Information

பொறியியல் இளநிலை கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10ஆம் தேதி துவங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதி விஷயத்தில் குழப்பம் நிலவி வந்தது. முன்பு, சிபிஎஸ்இ தேர்வுகள் முடிந்த பின்னர் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான் பின்னரும் கலந்தாய்வு நடப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்தார். 

இதையும் படிங்க;- ஆளுநேர தங்கள் உளறல்களை நிறுத்துங்கள்...! நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆவேசம்

Engineering counseling from September 10! Minister Ponmudi Information

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறுகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகிறது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி புதிய கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் பொன்முடி கூறுகையில், ''ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த ஒதுக்கீட்டுக்கு, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள். ஒவ்வொரு செமஸ்டரிலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

Engineering counseling from September 10! Minister Ponmudi Information

10ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக பொதுப்பிரிவு கலந்தாய்வு

* செப்டம்பர் 10 முதல் 12 வரை முதல்கட்ட கலந்தாய்வு

*  செப்டம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேததி வரை 2ம் கலந்தாய்வு 

*  அக்டோபர் 13 முதல் 15 வரை 3ம் கட்ட கலந்தாய்வு 

*  அக்டோபர் 29 முதல் 31 வரை 4ம் கட்ட கலந்தாய்வு 

நவம்பர் 15 முதல் 17ம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும்; பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 10 முதல் 20ம் தேதி வரை நடைபெறும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும், ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் பாடம் கட்டாயம். கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்… அதிரடியாக செயல்பட்ட காவல்துறை… அடுத்து நிகழ்ந்தது என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios