நாளைக்கே 1000 டாஸ்மாக் கடைகளை மூடணும்... முத்துசாமி ராஜினாமா செய்யணும்: அண்ணாமலை வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மரணங்களின் எதிரொலியாக வியாழக்கிழமை அங்கு சென்ற அண்ணாமலை, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்தார். சிகிச்சையில் உள்ளவர்களின் உடல்நலம் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அண்ணாமலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளைக்கே 1000 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திமுக அரசின் தவறுக்கு பொறுப்பேற்று மதுவிலக்குத்துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமி ராஜினாமா செய்யவேண்டும்.
மைக்ரோசாஃப்ட், கூகுள் குரோம் பயனர்களைக் குறிவைக்கும் புதிய மால்வேர் தாக்குதல்!
கள்ளச்சாராய மரணங்கள் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னிடம் கேட்டறிந்தார் என்றும் அவர் கூறினார். கள்ளச்சாராயமும், திமுகவும் பின்னிப்பிணைந்துள்ளன என்று சாடிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சிக்கு நேரில் வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலை ஆதரித்துப் பேசிய கேரளப் பெண்! மன்னிப்பு கேட்கச் சொல்லும் நெட்டிசன்கள்!