Asianet News TamilAsianet News Tamil

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

TN Govt Important announcement for adding name in birth certificate Rya
Author
First Published Aug 5, 2024, 5:54 PM IST | Last Updated Aug 5, 2024, 5:54 PM IST

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொடங்கி, வாக்காளர் அடையாள அட்டை பெற கடவு சீட்டு உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம் என பல ஆவணங்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம். பிறப்பு சான்றிதழ் என்பது குழந்தையின் சட்டப்பூர்வ சான்றிதழ் என்றாலும் அதில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆக கருதப்படும்.

எனவே பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் பதிவு செய்யாதவர்கள், தங்கள் பெயரை பிறப்பு சான்றிதழில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனரும், பிறப்பு இறப்பு சான்றிதழ்த்துறை பதிவாளருமான செல்வ விநாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

பிறப்பு சான்றிதழ் பெறாதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பிறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குனர்கள் பள்ளி மாணவர்களின் பிறப்பு சான்றிதழில் மாணவர்களின் பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், ஒருவேளை மாணவர்களின் பெயர் விடுபட்டிருந்தால் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து  தேவையான ஆவணங்கள் கொண்டு பெயர் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்த கட்டணமும் இன்றி கட்டணத்தை பதிவு செய்யலாம். 
12 மாதங்களுக்கு பின் குழந்தையின் பெயரை பதிவு செய்யவில்லை என்றால், 15 ஆண்டுகளுக்குள் உரிய காலதாமத கட்டணமாக ரூ.200 செலுத்தி பதிவு செய்வதற்கு பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios