தமிழகம் முழுவதும்.. பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பறந்த அதிரடி உத்தரவு !!
தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.
இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்போது பேசிய அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வழங்கிய அறிவுரைகள் போல், தற்போதும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..Price Hike: விலை உயரும் டீ,காபி.. எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!
பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்திருந்தால் அவற்றை உடனடியாக இடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி வளாகங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களையும் வெட்டி அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாற்ற முறையில் இருக்கும் பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது.. போலீஸ் பலத்த பாதுகாப்பு !
பள்ளியில் உள்ள ஸ்விட்ச் போர்டுகள், மின் இணைப்புகள் சேதம் அடைந்திருந்தால், அவற்றை பழுது நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்குள் மழைத்தண்ணீர் தேங்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்படும் என்று கூறினார்
இதையும் படிங்க..கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் - காதலி குடும்பத்தின் ‘அந்த’ செயல் !!